நிலத்தடி நீருக்கு பரிசோதனை அவசியம்


நிலத்தடி  நீருக்கு  பரிசோதனை  அவசியம்
x
தினத்தந்தி 15 Dec 2017 9:30 PM GMT (Updated: 15 Dec 2017 2:00 PM GMT)

சென்னை மற்றும் அதன் புற நகர் பகுதிகளில் தற்போது பெய்த பெருமழையின் காரணமாக, நிலத்தடி நீர் மட்டம் அதிகரித்துள்ளது.

சென்னை மற்றும் அதன் புற நகர் பகுதிகளில் தற்போது பெய்த பெருமழையின் காரணமாக, நிலத்தடி நீர் மட்டம் அதிகரித்துள்ளது. வீடுகள் மற்றும் ஆழ்குழாய் கிணறுகளில் கிடைக்கும் நீரின் அளவும் அதிகமாகி உள்ளது. பொதுவாக, கிணறு அல்லது ஆழ்குழாய் கிணறுகளில் பொருத்தப்பட்ட மோட்டார்கள், குழாய் வழியாக நீரை இழுத்து நேரடியாக மேல்நிலை தொட்டிகளில் நிரப்புகின்றன. அவற்றின் உட்புறம் பார்த்தால் மட்டுமே நீரின் தெளிவு, சுத்தம், நிறம் போன்றவற்றை அறிய இயலும். பெரும்பாலான இடங்களில் நிலத்தடி நீரின் தன்மை குறித்து அறியப்படாமல் அன்றாடம் பயன்படுத்தப்பட்டு வருவதாக அறியப்பட்டுள்ளது. தினமும் புழங்கும் நிலத்தடி நீர் பற்றி அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய குறிப்புகளை, அரசின் நிலநீர்பிரிவு அளித்துள்ளது. அவற்றிலுள்ள முக்கியமான குறிப்புகளை காணலாம்.

* கிணற்று நீர் அல்லது போர்வெல் நீரை குடி நீராக பயன்படுத்தும்போது ஒரு லிட்டரில் 1.5 மி.கிராம் அளவிற்கு மேலாக புளோரைடு இருப்பது அல்லது நைட்ரேட்டு போன்ற ரசாயனங்கள் கலந்திருப்பது கூடாது. அவ்வாறு இருப்பின் நீரை குடிப்பவர் உடல்நலம் பாதிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன.

* மேல்நிலை தொட்டிகளில் காற்று, சூரிய ஒளி ஆகியவை தொடர்ந்து படியும் காரணத்தால், பாசிகள் உருவாகின்றன. அதனால், காற்று, சூரிய ஒளி ஆகியவை படியாதவாறு தொட்டிகளை மூடி வைக்கலாம். கிணறுகள் அல்லது நீர் தொட்டிகளில் சிறிதளவு பிளீச்சிங் பவுடர் கலக்கலாம். அதாவது 100 லிட்டர் தண்ணீருக்கு 30 விழுக்காடு திறன் உள்ள பிளீச்சிங் பவுடர் 1 கிராம் என்ற அளவில் சேர்த்து பாசிகள் படிவதை தடுக்க முடியும்.

* நீரின் காரத்தன்மை (ணீறீளீணீறீவீஸீமீ) அதிகமாக இருந்தாலும், இரும்பு (வீக்ஷீஷீஸீ) போன்றவை கலந்திருந்தாலும் அந்த நீரை பயன்படுத்தும்போது உணவு மற்றும் ஆடைகளில் பழுப்பு நிறம் படிகிறது. அதனால், அத்தகைய ரசாயன பாதிப்புகளை அகற்றும் சுத்திகரிப்பு முறைகளை பயன்படுத்த வேண்டும்.

* ‘செப்டிக் டேங்க்’ மற்றும் ‘போர்வெல்’ இடையே சுமார் 50 அடி இடைவெளி இருப்பது பாதுகாப்பானது.

* தொழிற்சாலை கழிவுகள், வீட்டு உபயோக கழிவுகள், கால்நடை கழிவுகள், நீர்நிலை ஆதாரங்களில் கலக்கும் நிலையில் பாதுகாப்பான தூரத்தில் போர்வெல் அமைப்பது நல்லது.

* ‘போர்வெல்’ தண்ணீர் அல்லது கிணற்று நீரை பரிசோதித்து, அதிலுள்ள உப்புக்களின் வகைகளை அறிந்துகொண்டு புழங்குவதற்கு அல்லது குடிப்பதற்கு உகந்ததா..? என்பது பற்றி தெரிந்து கொள்ள நீர், நில வேதியியல் பரிசோதனை கூடங்களை தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு அமைத்துள்ளது.

Next Story