தண்ணீரில் கலந்துள்ள தனிமங்கள்


தண்ணீரில்  கலந்துள்ள  தனிமங்கள்
x
தினத்தந்தி 12 Jan 2018 9:30 PM GMT (Updated: 12 Jan 2018 12:11 PM GMT)

பொதுவாக, நாம் பயன்படுத்தும் தண்ணீரில் துத்தநாதம், நைட்ரேட் இரும்பு, காப்பர், சல்பைட் போன்ற பல்வேறு தனிம தாதுக்கள் கலந்திருக்கும் வாய்ப்புகள் உள்ளன.

பொதுவாக, நாம் பயன்படுத்தும் தண்ணீரில் துத்தநாதம், நைட்ரேட் இரும்பு, காப்பர், சல்பைட் போன்ற பல்வேறு தனிம தாதுக்கள் கலந்திருக்கும் வாய்ப்புகள் உள்ளன. இதை TDS (Total dissolved solids) என்று குறிப்பிடுவார்கள். நாம் வாங்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பாட்டிலில் டிடிஎஸ் 20 வரையில் இருக்கலாம். மெட்ரோ விநியோகம் செய்யும் குடிநீரில் 50 முதல் 60 வரை டிடிஎஸ் இருக்கும் வாய்ப்புள்ளது. சமைக்க, துணி துவைக்க பயன்படுத்தப்படும் நீரில் 600 டிடிஎஸ் வரை அனுமதிக்கப்படலாம்.

கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தும் நீரில் அதே அளவு டிடிஎஸ் வரை மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. ‘கியூரிங்’ உள்ளிட்ட கட்டுமான பணிகளில் பயன்படுத்தப்படும் தண்ணிரின் தரம் வரையறை செய்யப்பட்ட அளவுக்குள் இருக்கவேன்டும். அவ்வாறு இல்லாவிட்டால் தண்ணீரானது சிமெண்ட்டோடு எதிர்வினை புரிந்து கான்கிரீட்டின் தரத்தை வலுவிழக்க செய்யும் வாய்ப்புகள் இருக்கின்றன. மேற்கண்ட நுட்பமான பரிசோதனைகளை ஆய்வுக்கூடங்களில் மட்டுமே செய்ய இயலும். கடல் நீரில் சாதாரணமாக 35,000 டிடிஎஸ் வரை தாதுக்கள் கலந்திருக்கலாம். சில பகுதிகளில் 65,000 டிடிஎஸ் வரையிலும் கூட இருக்கும் வாய்ப்புகள் உள்ளன.

Next Story