.
சற்று முன் :
மராட்டியத்தில் சோனியா காந்தி இன்று சூறாவளி பிரசாரம்
முல்லைப்பெரியாறில் புதிய அணை கட்டுவது அவசியம் கேரள முதல்–மந்திரி உம்மன்சாண்டி
ஏசுவின் போதனைகளை பின்பற்றி பிறரது துயரங்களை களைந்திடுங்கள் ஜெயலலிதா ஈஸ்டர் வாழ்த்து
ஈஸ்டர் பண்டிகை கிறிஸ்தவ மக்களுக்கு, அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து
ஜெயலலிதா வாங்கிக் குவித்துள்ள சொத்துகளின் மதிப்பு ரூ.5 ஆயிரம் கோடி கருணாநிதி
சிவந்தி ஆதித்தனார் பெருமை என்றென்றும் நிலைத்து இருக்கும் வைகோ
வாரணாசி கோவில் வளாகத்தில் இருந்து கெஜ்ரிவால் குடும்பத்தினர் வெளியேற்றம்
சென்னை கடற்கரை-பல்லாவரம் இடையே சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கப்படும்
ஓட்டுக்கு வாக்காளர்கள் லஞ்சம் பெற்றால் ஓராண்டு சிறை வி.எஸ். சம்பத் எச்சரிக்கை
ஊழல் அணியின் தலைவர் சரத்பவார் உத்தவ் தாக்கரே கடும் தாக்கு

Advertisement

ரகுராம் ராஜன் கொடுத்த அதிர்ச்சியால் ‘சென்செக்ஸ்’ 383 புள்ளிகள் வீழ்ச்சி

Syndicate

Subscribe to Syndicate

AddToAny

Share/Save

Text Resize

-A +A

மும்பை

பாரத ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் நிபுணர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக முக்கிய கடன் வட்டி விகிதங்களை 0.25 சதவீதம் உயர்த்தினார். இது முதலீட்டாளர்கள், வங்கிகள், நிறுவனங்கள், பங்கு வர்த்தக நிபுணர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் காரணமாக வெள்ளிக்கிழமை அன்று மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் ‘சென்செக்ஸ்’ 383 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்தது.

கார், வீடு விற்பனை

கடனிற்கான வட்டி விகிதம் ஏற்கனவே அதிகமாக உள்ளதால் கார், சரக்கு வாகனங்கள், வீடு விற்பனை குறைந்து வந்துள்ளது. இந்நிலையில், முக்கிய கடன் வட்டியை ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளதால் வங்கிகளின் வட்டிச் செலவினம் அதிகரிக்கும்.

நேற்று டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு 50 காசு சரிவடைந்து 62.28–ஆக குறைந்தது. இதனால், பணவீக்கம் மேலும் உயரும்.

இதுபோன்ற காரணங்களால் ரியல் எஸ்டேட், வங்கி, பொறியியல் சாதனங்கள், மோட்டார் வாகனம் ஆகிய துறைகளைச் சேர்ந்த பல நிறுவனங்களின் பங்குகள் பலத்த அடி வாங்கின.

‘சென்செக்ஸ்’ கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, எல் & டி, சேசகோவா, எச்.டீ.எஃப்.சி. வங்கி, இந்துஸ்தான் யூனிலீவர் உள்ளிட்ட 21 நிறுவனங்களின் பங்கு விலை குறைந்தது.

வர்த்தகம் முடியும்போது ‘சென்செக்ஸ்’ 382.93 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 20,263.71 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 20,677.99 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 20,051.43 புள்ளிகள் வரையிலும் சென்றது.

நிப்டி

தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் ‘நிஃப்டி’ 103.45 புள்ளிகள் சரிந்து 6,012.10 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 6,130.95 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 5,932.85 புள்ளிகளுக்கும் சென்றது.

category:

Advertisement

Subscribe to Syndicate
Share/Save
-A +A

Advertisement

Advertisement

Advertisement

Advertisement

Advertisement

Most Read