.
சற்று முன் :
ஆட்சியை பிடிப்பதற்காக பாரதீய ஜனதா வதந்திகளை பரப்பி வருகிறது சோனியா குற்றச்சாட்டு
இந்தியா இதுபோன்ற ஊழல் மற்றும் திமிரான அரசை பார்த்தது இல்லை காங்கிரஸ் மீது மோடி தாக்கு
பிரதமரின் செயல்பாடுகளுக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் தரவில்லை: பிரதமர் ஊடக ஆலோசகர்

Advertisement

ரெப்போ ரேட் உயர் வால் தொழில்துறை யினர் அதிருப்தி

Syndicate

Subscribe to Syndicate

AddToAny

Share/Save

Text Resize

-A +A

புதுடெல்லி

பாரத ரிசர்வ் வங்கி ‘ரெப்போ ரேட்’டை 0.25 சதவீதம் உயர்த்தி உள்ளதால் தொழில்துறையினர் அதிருப்தி அடைந்துள்ளனர். ஏற்கனவே கடனிற்கான வட்டி விகிதம் அதிகமாக உள்ளதால் ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை நிறுவனங்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பிக்கி கருத்து

இந்திய வர்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்பு (ஃபிக்கி) தலைவர் நெய்னா லால் கித்வாய் இது குறித்து கூறுகையில், ‘‘கடனிற்கான வட்டி விகிதம் அதிகமாக இருப்பது பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு தடைக்கல்லாக உள்ளது. ரெப்போ விகிதம் அதிகரிப்பு அதிர்ச்சி அளிக்கிறது. கடனிற்கான வட்டி விகிதம் குறைக்கப்பட வேண்டும் என்பது தொழில்துறையினரின் கோரிக்கையாகும். பாரத ரிசர்வ் வங்கி எதிர்காலத்தில் இதனை கவனத்தில் எடுத்துக் கொள்ளும் என நம்புகிறேன்’’ என்று தெரிவித்தார்.

நிறுவனங்கள் வட்டிச் சுமையில் தவித்து வருகின்றன. எனவே, ரெப்போ ரேட் உயர்வை ரிசர்வ் வங்கி தவிர்த்து இருக்க வேண்டும் என இந்திய தொழிலக கூட்டமைப்பின் தலைமை இயக்குனர் சந்திரஜித் பானர்ஜி தெரிவித்துள்ளார்.

அசோசெம் அமைப்பின் தலைவர் ரானா கபூர் இது குறித்து கூறுகையில், ‘‘ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுரா£ம் ராஜன் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் எடுப்பார் என நிதிச் சந்தைகள் எதிர்பார்த்தன. இதற்கு மாறாக வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளார். இது பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதை மட்டும் முக்கிய இலக்காகக் கொண்டு அவர் செயல்பட்டுள்ளதை எடுத்துக்காட்டுகிறது’’ என்று தெரிவித்தார்.

கடனிற்கான அதிக வட்டி விகிதம், பணவீக்கம் அதிகரிப்பு போன்ற காரணங்களால் உற்பத்தி துறையில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களின் செயல்பாட்டு செலவினம் அதிகரித்துள்ளது. இதனால், பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதியில் வெளிநாட்டு நிறுவனங்களின் போட்டிகளை எதிர்கொள்வது ஒரு சவாலாக உள்ளது.

பொறியியல் கவுன்சில்

இந்நிலையில், ரிசர்வ் வங்கி கடனிற்கான வட்டி விகிதத்தை தொடர்ந்து உயர்த்தி வருவது அதிருப்தி அளிப்பதாக அமைந்துள்ளது என பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி கவுன்சில் (இ.இ.பி.சி. இந்தியா) தெரிவித்துள்ளது. பணவீக்கத்தை கட்டுப்படுத்த பொருள்கள் சப்ளை அதிகரிக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என இ.இ.பி.சி. மேலும் தெரிவித்துள்ளது.

category:

Advertisement

Subscribe to Syndicate
Share/Save
-A +A

Advertisement

Advertisement

Advertisement

Advertisement

Advertisement

Most Read