கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் முன்னாள் கேப்டன் கங்குலிக்கு கொலை மிரட்டல் + "||" + Former captain Ganguly threatened to kill

இந்திய கிரிக்கெட் முன்னாள் கேப்டன் கங்குலிக்கு கொலை மிரட்டல்

இந்திய கிரிக்கெட் முன்னாள் கேப்டன்
கங்குலிக்கு கொலை மிரட்டல்
கொல்கத்தா, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான கங்குலி மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர். கொல்கத்தா அருகில் மின்டாபோரேவில் 19-ந் தேதி நடைபெறும் கல்லூரிகளுக்கு இடையி
கொல்கத்தா,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான கங்குலி மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர். கொல்கத்தா அருகில் மின்டாபோரேவில் 19-ந் தேதி நடைபெறும் கல்லூரிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி தொடக்க விழாவில் அவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள திட்டமிட்டுள்ளார்.
இந்த நிலையில் அவரது வீட்டுக்கு மர்ம நபர் ஒருவர் ஆலம் என்ற பெயரில் மிரட்டல் கடிதம் எழுதி இருக்கிறார்.

அதில் அந்த கல்லூரி விழாவில் கலந்து கொள்ளக்கூடாது என்றும், கலந்து கொண்டால் உயிருடன் அவரை மீண்டும் பார்க்க முடியாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 7-ந் தேதி மிரட்டல் கடிதம் வந்ததாக உறுதி செய்துள்ள கங்குலி, இது குறித்து போலீசுக்கும், போட்டி அமைப்பாளர்களுக்கும் தகவல் தெரிவித்து விட்டதாக கூறினார்.நிகழ்ச்சியில் பங்கேற்பதா? இல்லையா? என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.