நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: தமிம், மொமினுல் ஹக் அரைசதம்


நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: தமிம், மொமினுல் ஹக் அரைசதம்
x
தினத்தந்தி 12 Jan 2017 11:00 PM GMT (Updated: 12 Jan 2017 8:33 PM GMT)

நியூசிலாந்து – வங்காளதேசம் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நேற்று தொடங்கியது.

வெலிங்டன்,

இதில் ‘டாஸ்’ ஜெயித்த நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி வங்காளதேச அணி முதலில் பேட்டிங் செய்த போது மூன்று முறை மழை குறுக்கிட்டது. பலத்த மழை காரணமாக 40.2 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டன. ஓரளவு நல்ல தொடக்கம் கண்ட வங்காளதேச அணி தொடக்க நாளில் 3 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்துள்ளது. தமிம் இக்பால் (56 ரன், 50 பந்து, 11 பவுண்டரி), மொமினுல் ஹக் (64 ரன், நாட்–அவுட்) அரைசதம் அடித்தனர். இம்ருல் கேயஸ் ஒரு ரன்னிலும், மக்முதுல்லா 26 ரன்னிலும் வெளியேறினர். 2–வது நாள் ஆட்டம் இன்று நடைபெறும்.


Next Story