இங்கிலாந்திற்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டி: இந்தியா 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி


இங்கிலாந்திற்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டி:  இந்தியா 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
x
தினத்தந்தி 19 Jan 2017 4:34 PM GMT (Updated: 19 Jan 2017 4:34 PM GMT)

இங்கிலாந்திற்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. புனேயில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

இந்த நிலையில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 2–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் இன்று தொடங்கியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது.  இதனை அடுத்து விளையாடிய இந்திய அணியில் யுவராஜ் சிங் (150) மற்றும் தோனி (134) ஆகியோர் சதம் கடந்தனர்.

இதனால் இந்திய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 381 ரன்கள் எடுத்தது.  அதன்பின் இங்கிலாந்து அணி விளையாடியது.  அந்த அணியின் வீரர் மோர்கன் (102) சதம் எடுத்துள்ளார்.  அவரை அடுத்து ராய் (82), ரூட் (54) மற்றும் அலி (55) அரை சதம் கடந்தனர்.

இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 366 ரன்கள் எடுத்தது.  இதனால் இந்திய அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.  3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2-0 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

Next Story