ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிப்பு


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிப்பு
x
தினத்தந்தி 14 Feb 2017 8:54 AM GMT (Updated: 14 Feb 2017 8:54 AM GMT)

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை,

ஸ்டீவன் சுமித் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடுகிறது.இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி புனேயில் வருகிற 23-ந் தேதியும், 2-வது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் மார்ச் 4-ந் தேதியும், 3-வது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் மார்ச் 16-ந் தேதியும், 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தரம்சாலாவில் மார்ச் 25-ந் தேதியும் தொடங்குகிறது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடருக்கான இந்திய அணி தேர்வு மும்பையில் இன்று  நடைபெற்றது. இதில்  வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரில் இடம் பிடித்த வீரர்கள் மாற்றமின்றி இந்திய அணியில்  இடம் பிடித்துள்ளனர். 

இந்திய அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் வருமாறு:- விராட் கோலி(கேப்டன்), அஷ்வின், ரவிந்தர் ஜடேஜா, புவனேஷ் குமார், அபினவ் முகுந்த், கருண் நாயர், ஹர்திக் பாண்ட்யா, புஜாரா, அஜின்கியா ரகானே, கே.எல். ராகுல், ரிதிமான் சகா, இஷாந்த் ஷர்மா, முரளி விஜய், ஜெயந்த் யாதவ், உமேஷ் யாதவ், குல்தீப் யாதவ்,

இந்திய தொடருக்கான ஆஸ்திரேலிய அணி வீரர்கள் வருமாறு:-

ஸ்டீவன் சுமித் (கேப்டன்), டேவிட் வார்னர், மேத்யூ ரென்ஷா, ஷான் மார்ஷ், பீட்டர் ஹோன்ட்ஸ்கோம்ப், மிட்செல் மார்ஷ், மேத்யூ வேட், ஸ்டீன் ஓகீபே, மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், ஹேசில்வுட், ஆஷ்டன் அகர், உஸ்மான் கவாஜா, ஜாக்சன் பிர்ட், மிட்செல் செப்சன், மேக்ஸ்வெல். 

Next Story