தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கிரிக்கெட்: நியூசிலாந்து அணியில் கப்தில் விலகல்


தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கிரிக்கெட்: நியூசிலாந்து அணியில் கப்தில் விலகல்
x
தினத்தந்தி 15 Feb 2017 9:37 PM GMT (Updated: 15 Feb 2017 9:37 PM GMT)

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஒரு 20 ஓவர், 5 ஒருநாள் போட்டி மற்றும் 3 டெஸ்ட் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகள் இடையிலான ஒரே ஒரு 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் நாளை நடக்கிறது. இதற்கான நியூசிலாந்து அணியி

ஆக்லாந்து,

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஒரு 20 ஓவர், 5 ஒருநாள் போட்டி மற்றும் 3 டெஸ்ட் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகள் இடையிலான ஒரே ஒரு 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் நாளை நடக்கிறது. இதற்கான நியூசிலாந்து அணியில் இடம் பெற்று இருந்த தொடக்க ஆட்டக்காரர் மார்ட்டின் கப்தில் பயிற்சியின் போது ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக 20 ஓவர் போட்டிக்கான அணியில் விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மேனுமான கிளென் பிலிப்ஸ் அறிமுக வீரராக சேர்க்கப்பட்டுள்ளார். ஒருநாள் போட்டிக்கான அணியில் டீன் பிரவுன்லி இடம் பிடித்துள்ளார்.


Next Story