இளையோர் கிரிக்கெட்: இந்தியா–இங்கிலாந்து மோதிய முதலாவது டெஸ்ட் ‘டிரா’


இளையோர் கிரிக்கெட்: இந்தியா–இங்கிலாந்து மோதிய முதலாவது டெஸ்ட் ‘டிரா’
x
தினத்தந்தி 16 Feb 2017 8:42 PM GMT (Updated: 16 Feb 2017 8:42 PM GMT)

19 வயதுக்கு உட்பட்ட (இளையோர்) இந்தியா–இங்கிலாந்து அணிகள் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் (4 நாள் ஆட்டம்) போட்டி நாக்பூரில் நடந்தது.

நாக்பூர்,

19 வயதுக்கு உட்பட்ட (இளையோர்) இந்தியா–இங்கிலாந்து அணிகள் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் (4 நாள் ஆட்டம்) போட்டி நாக்பூரில் நடந்தது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 501 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணி 3–வது நாளில் 8 விக்கெட்டுக்கு 431 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதனை அடுத்து 70 ரன்கள் முன்னிலையுடன் 2–வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 3–வது நாள் ஆட்டம் முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 23 ரன்கள் எடுத்து இருந்தது. நேற்று 4–வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி 53 ஓவர்களில் 167 ரன்னில் ஆல்–அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் சிஜோமான் ஜோசப் 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார். பின்னர் 238 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணி ஆட்ட நேரம் முடிவில் 49 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்தது. இதனால் இந்த ஆட்டம் டிராவில் முடிந்தது. அதிகபட்சமாக சுரேஷ் லோகேஷ்வர் 92 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இந்தியா–இங்கிலாந்து இளையோர் அணிகள் இடையிலான 2–வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் வருகிற 21–ந் தேதி தொடங்குகிறது.


Next Story