தென் ஆப்பிரிக்க வீரர் டி வில்லியர்ஸுக்கு டுவிட்டரில் விரேந்திர சேவாக் பிறந்த நாள் வாழ்த்து


தென் ஆப்பிரிக்க வீரர் டி வில்லியர்ஸுக்கு டுவிட்டரில் விரேந்திர சேவாக் பிறந்த நாள் வாழ்த்து
x
தினத்தந்தி 17 Feb 2017 11:24 AM GMT (Updated: 17 Feb 2017 11:24 AM GMT)

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் நட்சத்திர வீரரான டி வில்லியர்ஸுக்கு விரேந்திர சேவாக் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,
  
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான டி வில்லியர்ஸ் இன்று தனது 33 வது பிறந்த நாளை கொண்டாடினார். தென் ஆப்பிரிக்கா மட்டும் அல்லாது உலகம் முழுதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களை தனது அதிரடி ஆட்டத்தாலும் செயல்பாடுகளாலும் கவர்ந்து வைத்துள்ள டி வில்லியர்ஸுக்கு  பிறந்த நாள் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தபடி உள்ளனர். 

அந்த வகையில் இந்திய அணியில் இருந்து ஓய்வு பெற்ற அதிரடி வீரர் விரேந்திர சேவாக் தனக்கே உரிய பாணியில் டுவிட்டரில் டி வில்லியர்ஸுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தனது டுவிட்டரில் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ள சேவாக் கூறியிருப்பதாவது:- “ பிறந்தநாள் வாழ்த்துக்கள் மிஸ்டர் 360 டிகிரி,  தான் விரும்பும் போஸில் கிரிக்கெட் விளையாடும் ஒரே வீரர். டி வில்லியர்ஸ்” என அதில் குறிப்பிட்டுள்ளார்.

Next Story