பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்று: பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா


பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்று: பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா
x
தினத்தந்தி 19 Feb 2017 7:02 PM GMT (Updated: 19 Feb 2017 7:01 PM GMT)

பெண்களுக்கான உலக கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்று போட்டி கொழும்பில் நடந்து வருகிறது. நேற்று நடந்த சூப்பர் சிக்ஸ் சுற்றின் கடைசி ஆட்டத்தில் இந்திய அணி, பாகிஸ்தானுடன் மோதியது.

கொழும்பு,

பெண்களுக்கான உலக கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்று போட்டி கொழும்பில் நடந்து வருகிறது. நேற்று நடந்த சூப்பர் சிக்ஸ் சுற்றின் கடைசி ஆட்டத்தில் இந்திய அணி, பாகிஸ்தானுடன் மோதியது. இதில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 43.4 ஓவர்களில் 67 ரன்களில் சுருண்டது. இந்திய சுழற்பந்து வீச்சாளர் எக்கா பிஷ்ட் 10 ஓவர்களில் 7 மெய்டனுடன் 8 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை சாய்த்து பிரமிக்க வைத்தார். இந்திய பவுலர்கள் மொத்தம் 18 ஓவர்களை மெய்டனாக வீசி மிரட்டினர்.

தொடர்ந்து ஆடிய இந்தியா 22.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 70 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. மற்ற ஆட்டங்களில் இலங்கை அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேசத்தையும், தென்ஆப்பிரிக்கா 36 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்தையும் தோற்கடித்தது.

சூப்பர் சிக்ஸ் முடிவில் முதல் 4 இடங்களை பிடித்த இந்தியா (10 புள்ளி), தென்ஆப்பிரிக்கா (8 புள்ளி), இலங்கை (6 புள்ளி), பாகிஸ்தான் (4 புள்ளி) ஆகிய அணிகள் ஜூன் மாதம் நடக்கும் பெண்கள் உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றன. தகுதி சுற்றில் தோல்வி பக்கம் செல்லாத இந்திய அணி இறுதி ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவை நாளை (செவ்வாய்க்கிழமை) எதிர்கொள்கிறது.


Next Story