‘இந்தியாவுக்கு எங்களால் சவால் அளிக்க முடியும்’– ஸ்டீவன் சுமித்


‘இந்தியாவுக்கு எங்களால் சவால் அளிக்க முடியும்’– ஸ்டீவன் சுமித்
x
தினத்தந்தி 22 Feb 2017 11:30 PM GMT (Updated: 22 Feb 2017 7:01 PM GMT)

‘‘ஆஸ்திரேலியா சிறப்பாக விளையாடினால் 0–3 என்ற கணக்கில் தோற்கும். இல்லாவிட்டால் 0–4 என்ற கணக்கில் தொடரை முழுமையாக இழக்கும்’’ என்று

புனே,

ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் புனேயில் நிருபர்களிடம் கூறியதாவது:–

இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் கூறியிருப்பது பற்றி கேட்கிறீர்கள். ஒவ்வொருவரும் தங்களது கருத்தை சொல்லலாம். இவற்றில் எனக்கு நம்பிக்கை இல்லை.

இந்த ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு கடும் போட்டி கொடுக்கும் என்று நம்பிக்கை இருக்கிறது. இந்திய அணி சமீப காலமாக அதுவும் உள்ளூரில் அற்புதமாக விளையாடி இருக்கிறது. எனவே இந்த தொடர் கடினமாக இருக்கும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. அதே நேரத்தில் இங்குள்ள சூழலில் எங்களது வீரர்களால் நல்ல சவால் அளிக்க முடியும்.

இந்த தொடரில் எங்களை சாதாரண அணியாக கருதுவதாக நான் நினைக்கிறேன். ஹர்பஜன்சிங் கூட நாங்கள் 0–4 என்ற கணக்கில் தோற்கும் என்று கூறியிருக்கிறார். எங்களை பொறுத்தவரை இந்தியாவுக்கு ஈடுகொடுத்து விளையாட வேண்டும். இங்குள்ள சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப மாற்றிக்கொண்டு, திட்டங்களை கச்சிதமாக செயல்படுத்தி, கடினமான கட்டத்தில் போராடி மீண்டு வர வேண்டும். இதைத் தான் எங்களது வீரர்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன்.

ஆடும் லெவன் அணியை நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை. டாஸ் போடுவதற்கு முன்பாகத்தான் அதை அறிவிப்போம். ஆடுகளத்தை பார்க்க, மிகவும் வறண்டு காணப்படுகிறது. எனவே அதற்கு ஏற்ப ஆலோசித்து லெவன் அணியை தேர்வு செய்வோம்.

ஆசிய கண்டத்தில் நாங்கள் தொடர்ச்சியாக 9 டெஸ்டில் தோற்று இருக்கிறோம். இது எங்களுக்கு சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்தை தருகிறது. தோல்விப்பயணத்திற்கு முடிவு கட்டி வெற்றி பெற விரும்புகிறோம். மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்போம்.

இவ்வாறு ஸ்டீவன் சுமித் கூறினார்.


Next Story