‘தடைகளை கடந்து இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிப்பேன்’ இர்பான் பதான் உறுதி


‘தடைகளை கடந்து இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிப்பேன்’ இர்பான் பதான் உறுதி
x
தினத்தந்தி 22 Feb 2017 11:15 PM GMT (Updated: 22 Feb 2017 7:06 PM GMT)

10–வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ஏலம் கடந்த திங்கட்கிழமை பெங்களூருவில் நடந்தது. இதில் வேகப்பந்து வீச்சாளரும் ஆல்–ரவுண்டருமான இர்பான் பதானை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை.

ஆமதாபாத்,

இதைத்தொடர்ந்து டுவிட்டரில் அவருடைய ரசிகர்கள் இர்பான் பதானுக்கு ஆதரவாகவும், ஊக்கம் அளிக்கும் வகையிலும் டுவிட்களை பதிவிட்டனர். இந்த நிலையில் தனது ரசிகர்களுக்கு பதிலளிக்கும் வகையில் இர்பான் பதான் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ‘கடந்த 2010–ம் ஆண்டில் எனக்கு முதுகுப்பகுதியில் 5 முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. என்னை பரிசோதித்த உடலியல் நிபுணர் நான் மீண்டும் கிரிக்கெட் விளையாட முடியாது என்றும் எனது கனவுகளை கைவிட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். அந்த சமயத்தில் அவரிடம் நான் என்னால் எந்த வலியையும் தாங்கி கொள்ள முடிவும்.

ஆனால் எனது நாட்டுக்காக கிரிக்கெட் விளையாட முடியாத வலியை மட்டும் தாங்கி கொள்ளவே முடியாது என்று தெரிவித்தேன். நான் கடினமாக உழைத்து கிரிக்கெட் விளையாடி இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிப்பேன். எனது வாழ்க்கையில் நிறைய தடைகளை சந்தித்து இருக்கிறேன். இருப்பினும் நான் எடுத்த முயற்சியை ஒருபோதும் கைவிட்டது கிடையாது. இந்த குணத்துடன் எப்பொழுதும் இருக்க விரும்புகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.


Next Story