இந்திய அணியுடன் இணைந்தார், முகமது ‌ஷமி கடைசி டெஸ்டில் ஆடுவார்?


இந்திய அணியுடன் இணைந்தார், முகமது ‌ஷமி கடைசி டெஸ்டில் ஆடுவார்?
x
தினத்தந்தி 22 March 2017 11:15 PM GMT (Updated: 22 March 2017 7:34 PM GMT)

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ‌ஷமி கால் முட்டி காயம் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் மூன்று டெஸ்டில் விளையாடவில்லை.

தர்மசாலா,

அண்மையில் விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்டில் தமிழகத்துக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் பெங்கால் அணிக்காக களம் கண்ட முகமது ‌ஷமி 4 விக்கெட்டுகளை வீழ்த்தி தனது உடல்தகுதியை நிரூபித்தார்.

இந்த நிலையில் தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இந்தியா– ஆஸ்திரேலியா இடையிலான 4–வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் நாளை மறுதினம் தொடங்குகிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியுடன் முகமது ‌ஷமி இணைந்துள்ளார். ஆனால் ‌ஷமி அணியில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளாரா? என்பது குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இந்த ஆடுகளம் வேகப்பந்து வீச்சு நன்கு ஒத்துழைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதனால் முகமது ‌ஷமி அழைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அணியுடன் இணைந்து பயிற்சி மேற்கொள்ளும் 26 வயதான முகமது ‌ஷமி, கடைசி டெஸ்டில் களம் காணுவதற்கு வாய்ப்புள்ளது.


Next Story