தலாய்லாமாவுடன் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியினர் சந்திப்பு


தலாய்லாமாவுடன் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியினர் சந்திப்பு
x
தினத்தந்தி 24 March 2017 9:59 AM GMT (Updated: 24 March 2017 9:59 AM GMT)

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர்கள் திபெத் புத்த மத தலைவர் தலாய்லாமாவை சந்தித்து பேசினர்.

தர்மசலா,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 டெஸ்ட்  போட்டிகள் முடிந்துள்ள நிலையில், இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று  சம நிலையில் உள்ளன. இவ்விரு அணிகளுக்கு எதிரான  நான்காவது டெஸ்ட் போட்டி மலைப்பிரதேசமான தர்மசாலாவில் நடைபெறுகிறது. 

இந்த போட்டியில் பங்கேற்கப்பதற்காக இரு அணி வீரர்களும் தர்மசாலா வந்து சேர்ந்தனர்.  இந்த நிலையில், தர்மசாலாவில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் புத்த மத துறவியான தலாய்லாமாவ சந்தித்து பேசினர்.

Next Story