தியோதர் கோப்பை கிரிக்கெட்: இந்தியா ‘பி’ அணி வெற்றி


தியோதர் கோப்பை கிரிக்கெட்: இந்தியா ‘பி’ அணி வெற்றி
x
தினத்தந்தி 25 March 2017 10:45 PM GMT (Updated: 25 March 2017 7:17 PM GMT)

இந்தியா ‘ஏ’ (புளு), இந்தியா ‘பி’ (ரெட்), விஜய் ஹசாரே கோப்பை சாம்பியன் தமிழ்நாடு ஆகிய 3 அணிகள் இடையிலான தியோதர் கோப்பை கிரிக்கெட் போட்டி

விசாகப்பட்டினம்,

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நேற்று தொடங்கியது. இதில் நேற்று நடந்த தொடக்க லீக் ஆட்டத்தில் பார்த்தீவ் பட்டேல் தலைமையிலான இந்தியா ‘பி’–ஹர்பஜன்சிங் தலைமையிலான இந்தியா ‘ஏ’ அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த இந்தியா ‘பி’ அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 327 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஷிகர் தவான் 128 ரன்னும், இஷாங் ஜக்கி 53 ரன்னும், கேப்டன் பார்த்தீவ் பட்டேல் 50 ரன்னும் எடுத்தனர். இந்தியா ‘ஏ’ அணி தரப்பில் சித்தார்த் கவுல் 5 விக்கெட்டும், குனால் பாண்ட்யா 2 விக்கெட்டும், தீபக் ஹூடா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள். பின்னர் 328 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்தியா ‘ஏ’ அணி 48.2 ஓவர்களில் 304 ரன்னில் ஆல்–அவுட் ஆனது. இதனால் இந்தியா ‘பி’ அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக அம்பத்தி ராயுடு 92 ரன்கள் சேர்த்தார். இந்தியா ‘பி’ அணி தரப்பில் தவால் குல்கர்னி, அக்‌ஷய் கர்னிவர் தலா 3 விக்கெட்டும், அக்‌ஷர் பட்டேல், குல்வந்த் கெஜ்ரோலியா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். 47–வது ஓவரின் கடைசி பந்தில் ‌ஷர்துல் தாகூர் (17 ரன்) விக்கெட்டை வீழ்த்திய தவால் குல்கர்னி 49–வது ஓவரின் முதல் பந்தில் தீபக் ஹூடாவையும் (46 ரன்), 2–வது பந்தில் சித்தார்த் கவுலையும் (3 ரன்) சாய்த்து ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தார். இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா ‘பி’–தமிழ்நாடு அணிகள் சந்திக்கின்றன.


Next Story