கோலியை ஸ்டம்பால் குத்த நினைத்த ஆஸ்திரேலிய வீரர்


கோலியை ஸ்டம்பால் குத்த நினைத்த ஆஸ்திரேலிய வீரர்
x
தினத்தந்தி 31 March 2017 8:45 PM GMT (Updated: 31 March 2017 8:45 PM GMT)

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் எட் கோவன் நேற்று அளித்த ஒரு பேட்டியில், ‘அது இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடிக்கொண்டு இருந்த சமயம்.

ஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் எட் கோவன் நேற்று அளித்த ஒரு பேட்டியில், ‘அது இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடிக்கொண்டு இருந்த சமயம். எனது தாயாருக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்தது. அந்த நேரத்தில் தேவையில்லாத மோசமான வார்த்தையை கோலி என்னை பார்த்து கூறினார்.

இதனால் எனக்கு கோபம் ஏற்பட்டது. ‘நீங்கள் வரம்பு மீறுகிறீர்கள்’ என்று நடுவர் அவரை எச்சரித்த பிறகு அதன் தன்மையை கோலி உணர்ந்தார். பிறகு என்னிடம் மன்னிப்பு கேட்டார். ஆனாலும் அந்த நேரத்தில் கோலி அவ்வாறு சொன்ன போது உணர்ச்சி வேகத்தில், ஸ்டம்பை பிடுங்கி அவரை குத்தி சாய்த்து விடலாம் போல் தோன்றியது.’ என்றார். 34 வயதான எட்கோவன் இந்தியாவுடன் 2011–12, 2013–ம் ஆண்டு டெஸ்ட் தொடர்களில் விளையாடி இருந்தார்.

Next Story