வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: 10 ஆயிரம் ரன்களை கடந்தார், யூனிஸ்கான்


வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்:  10 ஆயிரம் ரன்களை கடந்தார், யூனிஸ்கான்
x
தினத்தந்தி 24 April 2017 8:45 PM GMT (Updated: 24 April 2017 7:50 PM GMT)

பாகிஸ்தான்–வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிங்ஸ்டனில் நடந்து வருகிறது.

கிங்ஸ்டன்,

முதலில் ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அணி 2–வது நாள் ஆட்டம் முடிவில் முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 278 ரன்கள் எடுத்து இருந்தது. நேற்று முன்தினம் 3–வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 286 ரன்னில் ‘ஆல்–அவுட்’ ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் அணி 3–வது நாள் ஆட்டம் முடிவில் 78.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்தது. பாபர் அசாம் 72 ரன்னிலும், யூனிஸ்கான் 58 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். கேப்டன் மிஸ்பா உல்–ஹக் 5 ரன்னுடனும், ஆசாத் ‌ஷபிக் 5 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். 116–வது டெஸ்டில் விளையாடும் 39 வயதான யூனிஸ்கான் 23 ரன்னை தொடுகையில் டெஸ்ட் போட்டியில் 10 ஆயிரம் ரன்களை எட்டினார். இதன் மூலம் டெஸ்ட் போட்டியில் 10 ஆயிரம் ரன்களை குவித்த முதல் பாகிஸ்தான் வீரர், 13–வது சர்வதேச வீரர் என்ற பெருமையை யூனிஸ்கான் பெற்றார். யூனிஸ்கான் டெஸ்ட் போட்டியில் இதுவரை மொத்தம் 10,035 ரன்கள் குவித்துள்ளார். இதில் 34 சதமும், 33 அரைசதமும் அடங்கும்.


Next Story