நியூசிலாந்து, இலங்கை அணிகள் அறிவிப்பு


நியூசிலாந்து, இலங்கை அணிகள் அறிவிப்பு
x
தினத்தந்தி 24 April 2017 8:45 PM GMT (Updated: 24 April 2017 8:44 PM GMT)

‘டாப்–8’ அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் ஜூன் 1–ந் தேதி முதல் 18–ந் தேதி வரை நடக்கிறது.

கொழும்பு,

இந்த போட்டிக்கான நியூசிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. வேகப்பந்து வீச்சாளர்கள் மெக்லெனஹான், ஆடம் மில்னே, ஆல்–ரவுண்டர் கோரி ஆண்டர்சன் ஆகியோர் அணிக்கு திரும்பி இருக்கின்றனர். ஐ.பி.எல். போட்டியில் விளையாடி 3 பேரும் உடல் தகுதியை நிரூபித்து இருப்பதால் அணியில் இடம் பிடித்துள்ளனர். நியூசிலாந்து அணி வருமாறு:–

கனே வில்லியம்சன் (கேப்டன்), கோரி ஆண்டர்சன், டிரென்ட் பவுல்ட், நீல் புரூம், கிரான்ட்ஹோம், மார்ட்டின் கப்தில், டாம் லாதம், மெக்லெனஹான், ஆடம் மில்னே, ஜிம்மி நீ‌ஷம், ஜீத்தன் பட்டேல், லுக் ரோஞ்ச், மிட்செல் சான்ட்னெர், டிம் சவுதி, ராஸ் டெய்லர்.

இதேபோல் சாம்பியன்ஸ் கோப்பை போட்டிக்கான இலங்கை கிரிக்கெட் அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. காயத்தில் இருந்து மீண்டு வந்து இருக்கும் கேப்டன் ஏஞ்சலோ மேத்யூஸ், வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா ஆகியோர் அணிக்கு திரும்பி இருக்கிறார்கள். தில்ருவன் பெரேரா, குணதிலகா ஆகியோர் மாற்று வீரர்களாக அணியில் இடம் பெற்றுள்ளனர். இலங்கை அணி வருமாறு:–

ஏஞ்சலோ மேத்யூஸ் (கேப்டன்), உபுல் தரங்கா, நிரோ‌ஷன் டிக்வெல்லா, குசல் பெரேரா, குசல் மென்டிஸ், கபுகேதரா, குணரத்னே, தினேஷ் சன்டிமால், மலிங்கா, சுரங்கா லக்மல், நுவான் பிரதீப், குலசேகரா, திசரா பெரேரா, லக்‌ஷன் சான்டகன், பிரசன்னா.


Next Story