பந்து வீச்சில் தாமதம்: வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு அபராதம்


பந்து வீச்சில் தாமதம்: வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு அபராதம்
x
தினத்தந்தி 26 April 2017 8:44 PM GMT (Updated: 26 April 2017 8:43 PM GMT)

பாகிஸ்தான்–வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் கிங்ஸ்டனில் நடந்த முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட்இண்டீசை வீழ்த்தியது. இதன் மூலம் பாகிஸ்தான் அணி 1–0 என்ற கணக்கில் முன்ன

கிங்ஸ்டன்,

பாகிஸ்தான்–வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் கிங்ஸ்டனில் நடந்த முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட்இண்டீசை வீழ்த்தியது. இதன் மூலம் பாகிஸ்தான் அணி 1–0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இரு அணிகள் இடையிலான 2–வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிட்ஜ்டவுனில் வருகிற 30–ந் தேதி தொடங்குகிறது. இந்த நிலையில் முதலாவது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் அணி பந்து வீச்சின் போது கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டதாக மைதான நடுவர்கள் அளித்த புகாரை தொடர்ந்து விசாரணை நடத்திய ஐ.சி.சி. போட்டி நடுவர் கிறிஸ் பிராட், வெஸ்ட்இண்டீஸ் அணியின் கேப்டன் ஜாசன் ஹோல்டருக்கு போட்டி கட்டணத்தில் 20 சதவீதமும், வீரர்களுக்கு போட்டி கட்டணத்தில் 10 சதவீதமும் அபராதமாக விதித்தார்.


Next Story