பயிற்சி ஆட்டத்தில் வங்காளதேசம் அசத்தல்


பயிற்சி ஆட்டத்தில் வங்காளதேசம் அசத்தல்
x
தினத்தந்தி 27 May 2017 8:16 PM GMT (Updated: 27 May 2017 8:16 PM GMT)

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டுக்கான பயிற்சி ஆட்டத்தில் நேற்று பாகிஸ்தான்–வங்காளதேச அணிகள் பர்மிங்காமில் மோதின. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த வங்காளதேசம் 9 விக்கெட் இழப்புக்கு 341 ரன்கள் குவித்து அசத்தியது. தொடக்க ஆட்டக்காரர் தமிம் இக்பால் சதம் (102

பர்மிங்காம்,

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டுக்கான பயிற்சி ஆட்டத்தில் நேற்று பாகிஸ்தான்–வங்காளதேச அணிகள் பர்மிங்காமில் மோதின. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த வங்காளதேசம் 9 விக்கெட் இழப்புக்கு 341 ரன்கள் குவித்து அசத்தியது. தொடக்க ஆட்டக்காரர் தமிம் இக்பால் சதம் (102 ரன், 9 பவுண்டரி, 4 சிக்சர்) அடித்தார். பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணி 45 ஓவர் முடிந்திருந்த போது 8 விக்கெட் இழப்புக்கு 279 ரன்கள் எடுத்திருந்தது.


Next Story