தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: பென் ஸ்டோக்ஸ் சதம் அடித்தார்


தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: பென் ஸ்டோக்ஸ் சதம் அடித்தார்
x
தினத்தந்தி 27 May 2017 8:31 PM GMT (Updated: 27 May 2017 8:31 PM GMT)

இங்கிலாந்து – தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சவுதம்டனில் நேற்று நடந்தது.

சவுதம்டன்,

இங்கிலாந்து – தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சவுதம்டனில் நேற்று நடந்தது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 330 ரன்கள் குவித்தது. இந்த ஆண்டில் அந்த அணி 300 ரன்களை கடப்பது இது 7–வது முறையாகும். 2–வது சதத்தை நிறைவு செய்த ஆல்–ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் 101 ரன்களும் (79 பந்து, 11 பவுண்டரி, 3 சிக்சர்), ஜோஸ் பட்லர் 65 ரன்களும், கேப்டன் மோர்கன் 45 ரன்களும் விளாசினர்.

தொடர்ந்து ஆடிய தென்ஆப்பிரிக்க அணி 36 ஓவர் முடிந்திருந்த போது 4 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் எடுத்திருந்தது. குயின்டான் டி காக் 98 ரன்களிலும், கேப்டன் டிவில்லியர்ஸ் 52 ரன்களிலும் கேட்ச் ஆனார்கள்.


Next Story