சர்ச்சைக்குரிய முறையில் ஆட்டம் இழந்தார் ஜேசன் ராய்


சர்ச்சைக்குரிய முறையில் ஆட்டம் இழந்தார் ஜேசன் ராய்
x
தினத்தந்தி 24 Jun 2017 10:01 AM GMT (Updated: 24 Jun 2017 10:01 AM GMT)

தென்னாப்ரிக்கா உடனான டி20 போட்டியில் சர்ச்சைக்குரிய முறையில் இங்கிலாந்தின் ஜேசன் ராய் ஆட்டம் இழந்தார்

இங்கிலாந்து,

இங்கிலாந்து சென்றுள்ள தென்னாப்ரிக்கா அணி மூன்று ஒருநாள், மூன்று டி20 மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.
இரண்டாவது போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இங்கிலாந்து டாசில் வென்று பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. 

தொடர்ந்து விளையாடிய தென்னாப்ரிக்கா 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இளப்பிற்கு 174 ஓட்டங்கள் எடுத்தது.

தொடர்ந்து 175 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடிய இங்கிலாந்தின் தொடக்க வீரர் பில்லிங்ஸ் 3 ரன்னில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான ஜேசன் ராய் தனது திறமையான ஆட்டத்தை வெளிகாட்டினார். 

15 ஓவர் முடிவு பெற்றிருந்த நிலையில் 2 விக்கெட்களை இழந்து 133 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது இங்கிலாந்து அணி. 16 ஆவது ஓவரில் பிளங்கிட் அடித்த பந்து பாய்ண்ட் பீல்டரை நோக்கி சென்றது. அப்போது ராய் ரன் ஓட முயற்சித்தார். ஆனால் பிளங்கிட் ஓட மறுக்கவே கிரீசுக்குள் திரும்ப முயற்சித்தார். 

பீல்டர் ரன் அவுட் ஆக்க முயற்சித்து வீசிய பந்து ராய்யின் காலில் பட்டது. ராய் பந்து வீசுவதை பார்த்துவிட்டு வேண்டுமென்றெ பந்தை தடுத்ததாகவும், காலில் படாமல் இருந்திருந்தால் ரன் அவுட் ஆகிருக்கும் என தென்னாப்ரிக்க வீரர்கள் நடுவர்களிடம் முறையிட்டனர். அதை தொடர்ந்து மூன்றாம் நடுவரின் உதவி நாடப்பட்டது. 

மூன்றாம் நடுவர் நன்கு ஆராய்ந்து ராய் பீல்டிங்கிற்கு இடையூராக இருந்ததால் ஆட்டமிழந்ததாக நடுவர் அறிவித்தார்.

அதன் பின்னர் வந்தவர்கள் ரன் குவிக்க தவறியதால் இங்கிலாந்து 3 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இதன் மூலம் டி20 போட்டிகளில் பீல்டிங்கிற்கு இடையூராக இருந்ததற்காக ஆட்டமிழந்த முதல் வீரரானார் ஜெசன் ராய்.

இதுவரை சர்வதேச போட்டிகளில் 8 வீரர்கள் இந்த முறையில் ஆட்டமிழந்துள்ளனர். இதில் இங்கிலாந்தின் ஹ்யூடன்,ஸ்டோக்ஸ் மற்றும் இந்தியாவின் மொகிந்தர் அமர்நாத், பாகிஸ்தானின் ரமீஸ் ராஜா, இன்ஷமாம் உல்-ஹக், முகமது ஹபிஸ், அன்வர் அலியும் அடங்குவர்.

Next Story