ஜெய்ப்பூர் போலீசாரின் நூதன விளம்பரம்: இந்திய கிரிக்கெட் வீரர் பும்ரா கண்டனம்


ஜெய்ப்பூர் போலீசாரின் நூதன விளம்பரம்: இந்திய கிரிக்கெட் வீரர் பும்ரா கண்டனம்
x
தினத்தந்தி 24 Jun 2017 8:59 PM GMT (Updated: 24 Jun 2017 8:59 PM GMT)

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் பும்ரா வீசிய நோ–பால் பாகிஸ்தான் அணிக்கு திருப்புமுனையாக அமைந்தது.

புதுடெல்லி,

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் பும்ரா வீசிய நோ–பால் பாகிஸ்தான் அணிக்கு திருப்புமுனையாக அமைந்தது. மறக்க முடியாத அந்த நோ–பால் வீச்சு படத்தை மையமாக வைத்து பாகிஸ்தானின் பைசலாபாத் போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு பிரசாரத்துக்கு பயன்படுத்தி உள்ளனர். அதில் வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் வகையில் ‘சாலை விதியை மீற வேண்டாம். மீறினால் அதன் விளைவு அதிகப்படியான விலையாக இருக்கும்’ என்று புகைப்படத்துடன் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதே யுக்தியை ஜெய்ப்பூர் போக்குவரத்து போலீசாரும் கடைப்பிடித்துள்ளனர். இதனால் பும்ரா கடும் எரிச்சலுக்கு ஆளாகி இருக்கிறார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில், ‘ஜெய்ப்பூர் போலீசாருக்கு பாராட்டுக்கள். நாட்டுக்காக சிறப்பான பங்களிப்பு அளிப்பவர்களை இப்படி தான் நீங்கள் நடத்துவீர்களா?. கவலைப்படாதீர்கள் நீங்கள் தவறு செய்தால் நான் கிண்டல் செய்ய மாட்டேன். ஏனெனில் தவறு செய்வது மனிதனின் இயல்பு என்பதை நான் நம்புகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து ஜெய்ப்பூர் போக்குவரத்து போலீசார் டுவிட்டர் மூலம் மன்னிப்பு கேட்டுள்ளனர். அத்துடன் வேண்டுமென்றே இதனை செய்யவில்லை என்றும் போக்குவரத்து விதிமுறை குறித்து அதிக விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் தான் இதனை செய்தோம் என்றும் கூறியுள்ளனர்.


Next Story