கடைசி 20 ஓவர் போட்டியில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து


கடைசி 20 ஓவர் போட்டியில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து
x
தினத்தந்தி 25 Jun 2017 7:36 PM GMT (Updated: 25 Jun 2017 7:35 PM GMT)

தென்ஆப்பிரிக்கா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 3–வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கார்டிப்பில் நேற்று நடந்தது.

கார்டிப்,

தென்ஆப்பிரிக்கா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 3–வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கார்டிப்பில் நேற்று நடந்தது. இங்கிலாந்து அணியில் கேப்டன் மோர்கன் திடீரென தானாகவே ஒதுங்கிக் கொண்டதால், ஜோஸ் பட்லர் அணியை வழிநடத்தினார். இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து 8 விக்கெட்டுக்கு 181 ரன்கள் குவித்தது. அறிமுக வீரர் டேவிட் மலன் 78 ரன்கள் (44 பந்து, 12 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினார். 20 ஓவர் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அறிமுக வீரர் ஒருவரின் அதிகபட்சம் இது தான்.

தொடர்ந்து ஆடிய தென்ஆப்பிரிக்க அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 162 ரன்களே எடுக்க முடிந்தது. கேப்டன் டிவில்லியர்ஸ் 35 ரன்கள் (19 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தார். 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி இதன் மூலம் 20 ஓவர் தொடரை 2–1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

அடுத்து இவ்விரு அணிகள் இடையே 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் நடத்தப்படுகிறது. முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 6–ந்தேதி லண்டனில் தொடங்குகிறது.


Next Story