2–வது ஒரு நாள் போட்டி மழையால் 43 ஓவராக குறைப்பு: இந்திய வீரர் ரஹானே சதம் அடித்தார்


2–வது ஒரு நாள் போட்டி மழையால் 43 ஓவராக குறைப்பு: இந்திய வீரர் ரஹானே சதம் அடித்தார்
x
தினத்தந்தி 25 Jun 2017 9:15 PM GMT (Updated: 25 Jun 2017 7:38 PM GMT)

மழையால் 43 ஓவர்களாக குறைக்கப்பட்ட வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2–வது ஒரு நாள் போட்டியில் இந்திய வீரர் ரஹானே சதம் அடித்தார்.

போர்ட் ஆப் ஸ்பெயின்,

மழையால் 43 ஓவர்களாக குறைக்கப்பட்ட வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2–வது ஒரு நாள் போட்டியில் இந்திய வீரர் ரஹானே சதம் அடித்தார்.

ஒரு நாள் கிரிக்கெட்

வெஸ்ட் இண்டீசுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதலாவது ஆட்டம் மழையால் பாதியில் ரத்தானது.

இந்த நிலையில் இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2–வது ஒரு நாள் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் நேற்று நடந்தது. மழையால் 2 மணி நேரம் பாதிக்கப்பட்டதால் ஆட்டம் 43 ஓவர் கொண்டதாக குறைக்கப்பட்டது. இரு அணியிலும் மாற்றம் இல்லை.

‘டாஸ்’ ஜெயித்த வெஸ்ட் இண்டீஸ் முதலில் இந்தியாவை பேட் செய்ய அழைத்தது. இதன்படி பேட்டிங்கை தொடங்கிய இந்தியாவுக்கு முந்தைய ஆட்டத்தை போன்ற ஷிகர் தவானும், ரஹானேவும் ‘செஞ்சுரி பார்ட்னர்ஷிப்’ அமைத்து தந்து அமர்க்களப்படுத்தினர்.

ரஹானே சதம்

அணியின் ஸ்கோர் 114 ரன்களாக உயர்ந்த போது தவான் 63 ரன்களில் (59 பந்து, 10 பவுண்டரி) ஸ்டம்பிங் செய்யப்பட்டார். அடுத்து கேப்டன் விராட் கோலி இறங்கினார். மறுமுனையில் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரஹானே, பந்தை பவுண்டரிக்கு விரட்டி தனது 3–வது சதத்தை பூர்த்தி செய்தார். அவர் 103 ரன்களில் (103 பந்து, 10 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டம் இழந்தார்.

35 ஓவர் முடிந்திருந்த போது இந்திய அணி 2 விக்கெட்டுக்கு 218 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் விராட் கோலி (44 ரன்), ஹர்திக் பாண்ட்யா (0) களத்தில் இருந்தனர்.


Related Tags :
Next Story