பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்காவிடம் பாகிஸ்தான் தோல்வி


பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்காவிடம் பாகிஸ்தான் தோல்வி
x
தினத்தந்தி 25 Jun 2017 8:05 PM GMT (Updated: 25 Jun 2017 8:05 PM GMT)

8 அணிகள் இடையிலான 11–வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது.

லீசெஸ்டர்,

8 அணிகள் இடையிலான 11–வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் லீசெஸ்டரில் நேற்று அரங்கேறிய 3–வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான்–தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதின. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 8 விக்கெட்டுக்கு 206 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக நஹிதா கான் 79 ரன்கள் எடுத்தார். அடுத்து களம் இறங்கிய தென்ஆப்பிரிக்க அணியில் தொடக்க வீராங்கனைகள் வோல்வார்த் (52 ரன்), லிசெல் லீ (60 ரன்) அரைசதம் அடித்த போதிலும் தென்ஆப்பிரிக்கா தடுமாறித்தான் இலக்கை அடைய முடிந்தது. 49 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 207 ரன்கள் சேர்த்து 3 விக்கெட் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. இன்றைய ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி, வெஸ்ட் இண்டீசுடன் (இந்திய நேரப்படி மாலை 3 மணி) மோதுகிறது.


Next Story