ரன் குவிப்பில் இந்திய கிரிக்கெட் அணி புதிய உலக சாதனை


ரன் குவிப்பில் இந்திய கிரிக்கெட் அணி புதிய உலக சாதனை
x
தினத்தந்தி 26 Jun 2017 6:05 AM GMT (Updated: 26 Jun 2017 6:05 AM GMT)

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிகமுறை 300க்கும் அதிகமான ரன்கள் குவித்து இந்தியா சாதனை

டெல்லி,

மேற்கிந்திய தீவுகள் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஐந்து ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டி மழையால் பாதிக்கப்பட்ட நிலையில் இரண்டாம் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் மேற்கிந்தியா தீவுகள் டாசில் வென்று பந்து வீச்சை தேர்ந்தெடுத்தது. 

இந்த ஆட்டத்திலும் மழை குறுக்கிட்டதால் 43 ஒவர்களாக குறைக்கப்பட்டது. இந்தியா தரப்பில் ரகானே 103 ரன்களும் விராத் கோலி 87 ரன்களும் எடுத்தனர். தொடர்ந்து ஆடிய இந்திய அணி ஐந்து விக்கெட் இழப்பிற்கு 310 ரன்கள் குவித்தது.  பின்னர் ஆடிய மேற்கிந்திய தீவுகள் 43 ஓவர் முடிவில் 205 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 105 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் 310 ரன்கள் குவித்ததன் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிகமுறை 300க்கும் அதிகமான ரன்கள் குவித்த அணிகளின் பட்டியலில் முதல் இடத்தை பிடித்தது இந்திய அணி. இந்திய அணி இதுவரை 914 போட்டிகளில் 96 முறை 300க்கும் அதிகமாக ரன்களை குவித்துள்ளது. இதற்கு முந்தைய சாதனையாக ஆஸ்திரேலியா அணி 901 போட்டிகளில் 95 முறை 300க்கும் அதிகமாக ரன்களை குவித்திருந்தது.

Next Story