ஐசிசி மகளிர் உலககோப்பை: பாகிஸ்தானை பந்தாடியது இங்கிலாந்து.


ஐசிசி மகளிர் உலககோப்பை: பாகிஸ்தானை பந்தாடியது இங்கிலாந்து.
x
தினத்தந்தி 28 Jun 2017 6:58 AM GMT (Updated: 28 Jun 2017 6:58 AM GMT)

ஐசிசி மகளிர் உலககோப்பை போட்டியில் 107 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது இங்கிலாந்து.

லிசெஸ்டர்,இங்கிலாந்து

ஐசிசி மகளிர் உலககோப்பை போட்டிகள் இங்கிலாந்தில் நடைபெற்று வருகின்றன. நேற்று நடைபெற்ற லீக் பிரிவு ஆட்டத்தில் இங்கிலாந்தும் பாகிஸ்தானும் மோதின. 

இப்போட்டியில் டாசில் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும் அதன் பின் களமிரங்கிய கேப்டன் ஹிதர் நைட்டும் நட்டலி சீவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர். இருவரும் சதம் அடித்தனர். இந்த ஜோடி மூன்றாவது விக்கெட்டுக்கு 213 ரன்கள் குவித்தது. நிர்ணயிக்கபட்ட 50 ஓவர்களில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 377 ரன்கள் குவித்தது.

50 ஓவரில் 378 ஓட்டங்கள் என்ற கடினமான இலக்கோடு களமிறங்கிய பாகிஸ்தான் அணியிணர் தொடர்ச்சியாக 3 விக்கெட்களை இழந்து தடுமாறினர். தொடக்க ஆட்டகாரராக களமிறங்கிய ஆயிஷா சஃபார் அரைசதம் அடித்தார். பாகிஸ்தான் அணி 29.2 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தொடர்ந்து மழை பேய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அதனால் டக்வொர்த் லூயில் விதிப்படி இங்கிலாந்து 107 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதாக அறிவிக்கப்பட்டது. 

இதன் மூலம் உலககோப்பை போட்டியை நடத்தும் இங்கிலாந்து தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. முன்னதாக நடைபெற்ற தொடக்க நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து இந்தியாவிடம் தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story