இந்திய அணி பயிற்சியாளர் பதவிக்கு மெக்கானிக்கல் இஞ்சினியர் விண்ணப்பம்


இந்திய அணி பயிற்சியாளர் பதவிக்கு மெக்கானிக்கல் இஞ்சினியர் விண்ணப்பம்
x
தினத்தந்தி 28 Jun 2017 8:05 AM GMT (Updated: 28 Jun 2017 8:05 AM GMT)

கும்ப்ளேவின் ராஜினாமாவை தொடர்ந்து இந்திய பயிற்சியாளர் பதவிக்கு மெக்கானிக்கல் இஞ்சினியர் ஒருவர் விண்ணப்பித்துள்ளார்.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராத் கோலிக்கும் பயிற்சியாளராக இருந்த அனில் கும்ப்ளேவிற்க்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கும்ப்ளே பதவி விலகுவதாக அறிவித்தார். 

எனவே காலியாக உள்ள பயிற்சியாளர் பதவிக்கு விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்திருந்தது. பயிற்சியாளர் பதவிக்கு பல முக்கிய முன்னாள் வீரர்கள் விண்ணப்பித்துள்ளனர். அதேபோல 30 வயதான உபேந்திர நாத் பிரம்மச்சாரி எனப்படும் ஒரு மெக்கானிக்கல் இஞ்சினியரும் விண்ணப்பித்துள்ளார். 

கிரிக்கெட்டில் முன் அனுபவமே இல்லாத அவர் அனுப்பியுள்ள பல தவறுகள் நிறைந்த விண்ணப்பத்தில் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே பதவி விலகிய பிறகு இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் (ஆண்கள்) பதவிக்கு நான் விண்ணப்பிக்க முடிவு செய்துள்ளேன். இந்திய அணி கேப்டனுக்கு பழம்பெரும் பயிற்சியாளர் தேவையில்லை என்பதை தான் உணர்வதாகவும் அவர் கூறியுள்ளார். 

அதோடு தன்னை பயிற்சியாளராக நியமித்தால் கும்ப்ளேவை போல தன்னையும் கோலி அவமானப்படுத்துவார் எனவும், தான் ஒரு சிறந்த வீரராக இல்லாததால் கும்ப்ளேவை போல் அல்லாமல் எந்தவித சூழ்நிலையையும் தன்னால் சமாளிக்க முடியும் எனவும், கோலியை சரியான வழியில் தன்னால் கொண்டுவர முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.


Next Story