‘இலக்கு நிர்ணயித்து செயல்படமாட்டேன்’ 50–வது டெஸ்டில் ஆடும் அஸ்வின் பேட்டி


‘இலக்கு நிர்ணயித்து செயல்படமாட்டேன்’ 50–வது டெஸ்டில் ஆடும் அஸ்வின் பேட்டி
x
தினத்தந்தி 24 July 2017 11:30 PM GMT (Updated: 24 July 2017 7:41 PM GMT)

இந்தியா–இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலேயில் நாளை தொடங்குகிறது.

காலே,

 இதில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின் களம் கண்டால் அவருக்கு 50–வது டெஸ்ட் போட்டியாகும். இது குறித்து காலேயில் அஸ்வின் நேற்று அளித்த பேட்டியில், ‘கடந்த காலங்களில் நான் இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு இருக்கிறேன். அதில் இருந்து நிறைய பாடங்கள் கற்று இருப்பதால் வருங்காலங்களில் புதிதாக இலக்கு நிர்ணயித்து செயல்படமாட்டேன். சர்வதேச கிரிக்கெட் போட்டியை பொறுத்தமட்டில் ஒவ்வொரு நாளும் நாம் ஆட்டத்தில் முன்னேற்றம் காண வேண்டியது முக்கியமானதாகும்.

50–வது டெஸ்ட் போட்டியில் விளையாடுவது சிறப்பானது தான். இன்னும் எத்தனை போட்டிகளில் விளையாடுவோம் என்பது நமக்கு தெரியாது. காலே மைதானம் எனக்கு மறக்கமுடியாததாகும். 2015–ம் ஆண்டு தொடரின் போது இங்கு நடந்த டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகள் வீழ்த்தியது என் மனதில் நிலைத்து நிற்கிறது’ என்று தெரிவித்தார். 30 வயதான அஸ்வின் 49 டெஸ்ட் போட்டியில் விளையாடி 275 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார்.


Next Story