‘எனது வாழ்க்கையில் மோசமான தொடர்’–கேப்டன் சன்டிமால்


‘எனது வாழ்க்கையில் மோசமான தொடர்’–கேப்டன் சன்டிமால்
x
தினத்தந்தி 14 Aug 2017 10:15 PM GMT (Updated: 14 Aug 2017 8:34 PM GMT)

வெற்றிக்கு பின்னர் இந்திய அணி கேப்டன் விராட்கோலி அளித்த பேட்டியில், ‘நாங்கள் வெற்றி பெற்று வருவதால் அணியில் உத்வேகம் இருந்து வருகிறது.

தோல்விக்கு பிறகு இலங்கை அணி கேப்டன் சன்டிமால் கருத்து தெரிவிக்கையில், ‘எனது வாழ்க்கையில் மிகவும் கடினமான தொடர் இது என்பதில் சந்தேகம் இல்லை. இந்த போட்டி தொடரில் எங்களால் ஒரு ஆட்டத்திலும் முழுமையாக 5 நாட்களும் ஆட முடியாமல் போனது. எனக்கு வாழ்க்கையில் மோசமான போட்டி தொடர் இதுவாகும். இது அணிக்கும், எனக்கும் கடினமான தருணமாகும். எல்லா புகழும் இந்திய அணியையே சாரும். இந்த போட்டி தொடரில் இந்திய அணி அருமையாக செயல்பட்டனர்.

ஆட்டத்தை 5 நாட்களுக்குள் எடுத்து செல்ல முடியாமல் போனது ஏமாற்றம் அளிக்கிறது. 3 நாட்களுக்குள் தோல்வியை சந்தித்ததை நியாயப்படுத்த முடியாது. நாங்கள் தோல்வியை சந்தித்தாலும் ரசிகர்கள் ஆதரவு அளித்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. அது தான் அணிக்கு தேவையானதாகும். விரைவில் நாங்கள் வெற்றி பாதைக்கு திரும்புவோம். கடுமையாக பயிற்சி மேற்கொண்டோம். நல்ல திட்டத்துடன் களம் கண்டோம். ஆனால் அதனை களத்தில் செயல்படுத்த முடியாமல் போய்விட்டது.’ என்றார்.

வெற்றிக்கு பின்னர் இந்திய அணி கேப்டன் விராட்கோலி அளித்த பேட்டியில், ‘நாங்கள் வெற்றி பெற்று வருவதால் அணியில் உத்வேகம் இருந்து வருகிறது. நாங்கள் களத்தில் இறங்கி விட்டால் எதிர்காலம் குறித்து அதிகம் நினைப்பது கிடையாது. நாட்டுக்காக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுகிறோம் என்ற பெருமிதத்தை மட்டுமே மனதில் வைத்து செயல்படுகிறோம்.

எங்களது இந்த மனநிலையில் ஒரு துளி கூட இதுவரை மாறவில்லை. எந்த அணியும் சிறப்பாக செயல்பட்டால் இதுபோன்ற வெற்றியை பெற முடியும். கடந்த ஆட்டத்தில் நாங்கள் ‘பாலோ–ஆன்’ கொடுத்தாலும் நாங்கள் நினைத்தபடி எங்களுக்கு திட்டத்தை செயல்படுத்த தவறினோம். ஆனால் இந்த முறை வாய்ப்பை நாங்கள் சரியாக பயன்படுத்தி சிறப்பாக செயல்பட்டோம். உலகின் முன்னணி 3 வேகப்பந்து வீச்சாளர்களில் முகமது ‌ஷமியும் ஒருவர் என்பது எனது கணிப்பாகும். அவர் எங்களுக்கு மிகவும் மதிப்பு மிக்க பந்து வீச்சாளர் ஆவார். ஹர்திக் பாண்ட்யாவின் அபாரமான பேட்டிங் எதிரணியினரின் மனநிலையை மாற்றி இருக்கும்’ என்று தெரிவித்தார்.


Next Story