இலங்கை மண்ணில் அதிக வெற்றி பெற்று இந்திய அணி சாதனை


இலங்கை மண்ணில் அதிக வெற்றி பெற்று இந்திய அணி சாதனை
x
தினத்தந்தி 14 Aug 2017 9:45 PM GMT (Updated: 14 Aug 2017 8:40 PM GMT)

சொந்த மண்ணில் 3 மற்றும் அதற்கு மேற்பட்ட ஆட்டம் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் இலங்கை அணி முழுமையாக தோல்வியை (ஒயிட்வாஷ்) சந்திப்பது இது 2–வது முறையாகும்.

* வெளிநாட்டு மண்ணில் 3 அல்லது அதற்கு அதிகம் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் இந்திய அணி முழுமையாக வெற்றியை சுவைப்பது இதுவே முதல்முறையாகும். ஒட்டுமொத்தத்தில் இந்த வகையில் 5–வது முழுமையான டெஸ்ட் போட்டி தொடர் வெற்றி இதுவாகும்.

* சொந்த மண்ணில் 3 மற்றும் அதற்கு மேற்பட்ட ஆட்டம் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் இலங்கை அணி முழுமையாக தோல்வியை (ஒயிட்வாஷ்) சந்திப்பது இது 2–வது முறையாகும். இதற்கு முன்பு 2004–ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவிடம் இதே மாதிரியான தோல்வியை சந்தித்து இருந்தது. ஒட்டுமொத்தத்தில் இதே மாதிரி முழுமையாக தொடரை இழப்பது 6–வது முறையாகும்.

* இன்னிங்ஸ் வித்தியாசத்தில் இந்திய அணி பெற்ற 3–வது பெரிய வெற்றி இதுவாகும். அன்னிய மண்ணில் இந்த வகையில் 2–வது பெரிய வெற்றியாகும். இலங்கை அணிக்கு ஒட்டுமொத்தத்தில் 5–வது மோசமான இன்னிங்ஸ் தோல்வியாகும். சொந்த மண்ணில் 2–வது பெரிய தோல்வியாகும்.

* இந்த போட்டி தொடரில் இந்திய அணி 3 முறை முதல் இன்னிங்சில் 300 ரன்கள் முன்னிலை பெற்று சாதனை படைத்தது. இதற்கு முன்பு ஒரு தொடரில் அதிகபட்சமாக 2 முறை இதேபோல் முன்னிலை கண்டு இருக்கிறது.

* இந்த போட்டி தொடரில் இந்திய வீரர்கள் ஷிகர் தவான், புஜாரா, விராட்கோலி, ரஹானே, ஹர்திக் பாண்ட்யா ஆகிய 5 வீரர்கள் சதம் அடித்தனர். வெளிநாட்டு போட்டி ஒரு தொடரில் அதிகபட்சமாக சதம் அடித்த சாதனையை சமன் செய்தனர்.

* சொந்த மண்ணில் இலங்கை அணி 3 நாட்களுக்குள் டெஸ்ட் போட்டியில் தோல்வியை தழுவியது இது 4–வது முறையாகும்.

* இலங்கை மண்ணில் இந்திய அணி பெற்ற 9–வது டெஸ்ட் வெற்றி இதுவாகும். இதன் மூலம் இலங்கையில் அதிக டெஸ்ட் போட்டியில் வெற்றி கண்ட அணி என்ற சாதனையை இந்தியா படைத்துள்ளது. அதற்கு அடுத்த படியாக இங்கு பாகிஸ்தான் அணி 8 டெஸ்டில் வெற்றி கண்டுள்ளது.


Next Story