டி.என்.பி.எல். கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீசுக்கு வெற்றி இலக்கு 144 ரன்கள்


டி.என்.பி.எல். கிரிக்கெட்:  சேப்பாக் சூப்பர் கில்லீசுக்கு வெற்றி இலக்கு 144 ரன்கள்
x
தினத்தந்தி 20 Aug 2017 4:44 PM GMT (Updated: 20 Aug 2017 4:43 PM GMT)

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு 144 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

சென்னை,

2–வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 22–ந்தேதி தொடங்கியது. ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில் 8 அணிகள் பங்கேற்றன. லீக் மற்றும் பிளே–ஆப் சுற்று முடிவில் நடப்பு சாம்பியன் தூத்துக்குடி பேட்ரியாட்சும், சேப்பாக் சூப்பர் கில்லீசும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.

இந்த நிலையில் சாம்பியன் கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீசும், தூத்துக்குடி பேட்ரியாட்சும் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்றிரவு விளையாடி வருகின்றன.

டாஸ் வென்ற தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாட தொடங்கியது.

அந்த அணியின் வாஷிங்டன் சுந்தர் 14(12), கவுசிக் 24(19), அபினவ் 41(38), தினேஷ் கார்த்திக் 17(16), ஆனந்த் 1(3), நாதன் 16(11), ஆகாஷ் 8(8) மற்றும் ஆஷிக் 1(2) ரன்களில் ஆட்டமிழந்தனர்.  கணேஷ் 13(11) ஆட்டமிழக்கவில்லை.

ஆட்டத்தின் முடிவில் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 143 ரன்களை தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி எடுத்துள்ளது.

இதனால் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு 144 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

Next Story