வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான பகல்–இரவு டெஸ்ட்: இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் வெற்றி


வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான பகல்–இரவு டெஸ்ட்: இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் வெற்றி
x
தினத்தந்தி 20 Aug 2017 8:59 PM GMT (Updated: 20 Aug 2017 8:59 PM GMT)

வெஸ்ட்இண்டீஸ் – இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது பகல்–இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் நடந்தது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து 514 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்ததை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 2–வது நாள் முடிவில் ஒரு

பர்மிங்காம்,

வெஸ்ட்இண்டீஸ் – இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது பகல்–இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் நடந்தது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து 514 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்ததை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 2–வது நாள் முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 44 ரன்கள் எடுத்திருந்தது.

இந்த நிலையில் 3–வது நாளான நேற்று முன்தினம் தொடர்ந்து பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் 168 ரன்னில் ‘ஆல்–அவுட்’ ஆகி பாலோ–ஆன் ஆனது. இதையடுத்து ‘பாலோ–ஆன்’ பெற்று 346 ரன்கள் பின்தங்கிய நிலையில் தொடர்ந்து 2–வது இன்னிங்சை விளையாடிய வெஸ்ட்இண்டீஸ் அணி 45.4 ஓவர்களில் 137 ரன்னில் சுருண்டு போனது. இதன் மூலம் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 209 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை சுவைத்தது. ஸ்டூவர்ட் பிராட் 3 விக்கெட்டும், ஜேம்ஸ் ஆண்டர்சன், ரோலண்ட் ஜோன்ஸ், மொயீன் அலி தலா 2 விக்கெட்டும் சாய்த்தனர். இங்கிலாந்து அணி ஒரே நாளில் 19 விக்கெட்டுகளை சாய்த்தது கவனிக்கத்தக்கது. வெற்றியின் மூலம் 3 போட்டி கொண்ட தொடரில் இங்கிலாந்து 1–0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 2–வது டெஸ்ட் வருகிற 25–ந்தேதி லீட்சில் தொடங்குகிறது.


Next Story