4-1 என்ற கணக்கில் இந்தியா தொடரை வெல்லும்-லட்சுமண்


4-1 என்ற கணக்கில் இந்தியா தொடரை வெல்லும்-லட்சுமண்
x
தினத்தந்தி 12 Sep 2017 9:21 PM GMT (Updated: 12 Sep 2017 9:21 PM GMT)

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது அமிரின் மனைவி நர்ஜிஸ் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.

ஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடர் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் வி.வி.எஸ்.லட்சுமண் நேற்று அளித்த ஒரு பேட்டியில், ‘இந்தியாவின் ‘நம்பர் ஒன்’ எதிராளி ஆஸ்திரேலியா என்பதில் சந்தேகமில்லை. இரு அணிகளுமே கடினமாக போராடிக்கூடியது. இந்த தொடரிலும் அதில் வித்தியாசம் இருக்கப்போவதில்லை. கோலியும், ஸ்டீவன் சுமித்தும் நவீன கால கிரிக்கெட்டில் சிறந்தவர்கள். அவர்கள் ஏற்படுத்தியுள்ள தாக்கம் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் முன்உதாரணமாக அமைந்திருக்கிறது. களம் இறங்கி விட்டால் வெற்றி மட்டுமே நோக்கம். இங்கு நட்பாக இருக்க வேண்டிய தேவையே இல்லை. இருவரும் ஆக்ரோஷமாக விளையாடி வெற்றிக்காக முயற்சிப்பார்கள். கடுமையாக மோதிக்கொள்ளும் போது போட்டி கடுமையாக இருக்குமே தவிர, நட்புக்கு இடம் இருக்காது. கோலியும், ஸ்டீவன் சுமித்தும் இளம் வீரர்கள். ஆனால் டெஸ்ட் தொடரின் போது சுமித்தின் கேப்டன்ஷிப் மெச்சும்படி இல்லை. டோனி போன்ற வீரர்கள் அணியில் இருப்பது கோலிக்கு சாதகமான அம்சமாகும். முன்மாதிரியாக இருக்கும் கோலியே, தற்போதைய கட்டத்தில் சுமித்தை விட சிறந்த கேப்டன் ஆவார்’ என்றார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றும் என்று தனது கணிப்பை வெளியிட்ட வி.வி.எஸ்.லட்சுமண், ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சு பலவீனமாக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

***

தந்தை ஆனார், முகமது அமிர்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது அமிரின் மனைவி நர்ஜிஸ் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இங்கிலாந்தில் வசிக்கும் அவருக்கு நேற்று அழகான பெண் குழந்தை பிறந்தது. தந்தையான தகவலை டுவிட்டரில் வெளியிட்டு மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட முகமது அமிர், குழந்தையின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இதனால் உலக லெவன் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் அவர் விளையாடவில்லை.

***

புச்சிபாபு கிரிக்கெட்: இறுதிப்போட்டிக்கு
டி.என்.சி.ஏ. தலைவர் லெவன் அணி முன்னேற்றம்


புச்சிபாபு கிரிக்கெட் போட்டித் தொடர் சென்னையில் நடந்து வருகிறது. இதில் நேற்று நிறைவடைந்த அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க (டி.என்.சி.ஏ.) தலைவர் லெவன் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் டி.என்.சி.ஏ. மாவட்ட லெவன் அணியை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த ஆட்டத்தில் மாவட்ட லெவன் அணி நிர்ணயித்த 271 ரன்கள் இலக்கை தலைவர் லெவன் அணி கேப்டன் பாபா அபராஜித் (90 ரன்), பிரதோஷ் ரஞ்சன் பால் (66 ரன்), எஸ்.கார்த்திக் (63ரன்) ஆகியோரின் அபாரமான ஆட்டத்தால் எட்டிப்பிடித்தது. மற்றொரு அரைஇறுதியில் ஐதராபாத் அணி 139 ரன்கள் வித்தியாசத்தில் உத்தரபிரதேச அணியை சாய்த்தது.

***

கார் டயர் வெடித்தது: தப்பினார் ரெய்னா


ந்திய கிரிக்கெட் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டுள்ள பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா துலீப் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா புளு அணியின் கேப்டனாக உள்ளார். இதற்கான ஒரு ஆட்டத்தில் பங்கேற்பதற்காக அவர் உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் இருந்து கான்பூருக்கு காரில் புறப்பட்டார். ஈட்டவா எந்த இடத்தில் சென்று கொண்டிருந்த போது திடீரென அவரது காரின் ஒரு டயர் வெடித்தது. அதிகாலை 2 மணி அளவில் நடந்த இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக ரெய்னா காயமின்றி தப்பினார். கார் மட்டும் அதிவேகமாக சென்றிருந்தால் நிலைமை விபரீதமாக ஆகியிருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர். காரில் மாற்று டயர் இல்லாததால் சில மணி நேரம் அங்கேயே நின்ற ரெய்னா பிறகு உள்ளூர் போலீசார் உதவியுடன் வேறு காரில் கிளம்பினார்.

***

தென்ஆப்பிரிக்கா ஒரு நாள் போட்டி அணிக்கும்
பிளிஸ்சிஸ் கேப்டன் டிவில்லியர்ஸ்-பிளிஸ்சிஸ்


தென்ஆப்பிரிக்கா ஒரு நாள் கிரிக்கெட் போட்டி அணியின் கேப்டன் டிவில்லியர்ஸ் கடந்த மாதம் அந்த பொறுப்பில் இருந்து விலகினார். இருப்பினும் 2019-ம் ஆண்டு உலக கோப்பையில் ஆடுவதே தனது இலக்கு என்று டிவில்லியர்ஸ் கூறினார். இந்த நிலையில் ஒரு நாள் போட்டி அணிக்கும் 33 வயதான பாப் டு பிளிஸ்சிஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார். ஏற்கனவே அவர் டெஸ்ட், 20 ஓவர் போட்டிக்கும் கேப்டனாக உள்ளார். இதன் மூலம் இனி தென்ஆப்பிரிக்க அணியின் மூன்று வடிவிலான கிரிக்கெட்டுக்கும் ஒரே கேப்டனாக டு பிளிஸ்சிஸ் செயல்படுவார். அவருக்கு புகழாரம் சூட்டியுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி ஹரூன் லார்கட் கூறும் போது, ‘உலக கிரிக்கெட் அரங்கில் சிறந்த கேப்டன்களில் ஒருவராக பிளிஸ்சிஸ் தன்னை நிலை நிறுத்தி கொண்டுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான உலக லெவன் அணியின் கேப்டனாக அவர் நியமிக்கப்பட்டதே அதற்கு சான்று’ என்றார்.

Next Story