குல்தீப் யாதவ் அசத்தல்: 26 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய வீரர் ‘ஹாட்ரிக்’ சாதனை

குல்தீப் யாதவ் அசத்தல்: 26 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய வீரர் ‘ஹாட்ரிக்’ சாதனை
x
தினத்தந்தி 21 Sep 2017 9:15 PM GMT (Updated: 21 Sep 2017 7:43 PM GMT)

‘சைனாமேன்’ வகை பவுலரான இந்திய இடக்கை சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் ‘ஹாட்ரிக்’ விக்கெட் வீழ்த்தி சாதனை புரிந்தார்.

குல்தீப் யாதவ் அசத்தல்: 26 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய வீரர் ‘ஹாட்ரிக்’ சாதனை

‘சைனாமேன்’ வகை பவுலரான இந்திய இடக்கை சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் ‘ஹாட்ரிக்’ விக்கெட் வீழ்த்தி சாதனை புரிந்தார்.

அவர் வீசிய 33-வது ஓவரின் 2-வது பந்தில் ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் மேத்யூ வேட் (2 ரன்) போல்டு ஆனார். அடுத்த பந்தில் ஆஷ்டன் அகர் (0) எல்.பி.டபிள்யூ. ஆனார். அதற்கு அடுத்த பந்தில் கம்மின்ஸ் (0) விக்கெட் கீப்பர் டோனியிடம் கேட்ச் ஆனார். தொடர்ச்சியாக 3 விக்கெட்டுகளை சாய்த்ததால் அது ‘ஹாட்ரிக்’ சாதனையாக அமைந்தது.

ஒரு நாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் இது 43-வது ஹாட்ரிக்காக பதிவானது. இந்திய தரப்பில் ஹாட்ரிக் சாதனை படைத்த 3-வது பவுலர் குல்தீப் யாதவ் ஆவார். ஏற்கனவே சேத்தன் ஷர்மா 1987-ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராகவும் (நாக்பூர்), கபில்தேவ் 1991-ம்ஆண்டு இலங்கைக்கு எதிராகவும் (கொல்கத்தா) ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்திருந்தனர். 26 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியர் ஒருவர் மகத்தான ‘ஹாட்ரிக்’ பட்டியலில் இணைந்திருக்கிறார்.

22 வயதான உத்தரபிரதேசத்தை சேர்ந்த குல்தீப் யாதவுக்கு இது 9-வது ஒரு நாள் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 7-வது ‘ஹாட்ரிக்’ சாதனையாகவும் இது அமைந்தது.

Next Story