இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு சூதாட்டத்தில் தொடர்பா? ஐ.சி.சி. விசாரணை தொடக்கம்


இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு சூதாட்டத்தில் தொடர்பா? ஐ.சி.சி. விசாரணை தொடக்கம்
x
தினத்தந்தி 24 Sep 2017 9:15 PM GMT (Updated: 24 Sep 2017 7:23 PM GMT)

இலங்கை கிரிக்கெட் அணி சமீபத்தில் சொந்த மண்ணில் அடுத்தடுத்து தொடர்ச்சியாக தோல்வி கண்டது.

துபாய்,

இலங்கை கிரிக்கெட் அணி சமீபத்தில் சொந்த மண்ணில் அடுத்தடுத்து தொடர்ச்சியாக தோல்வி கண்டது. இலங்கை அணியின் மோசமான செயல்பாட்டுக்கு சூதாட்டமே காரணம் என்று இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும், முன்னாள் தேர்வாளருமான பிரமோத்யா விக்ரமசிங்கே குற்றம் சாட்டினார். சில ஆட்டங்களின் போக்கு வழக்கத்திற்கு மாறாக சந்தேகம் அளிக்கும் வகையில் இருந்ததாக அவர் கூறினார்.

ஏற்கனவே 2011-ம் ஆண்டு உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் இலங்கை அணி, இந்தியாவிடம் தோற்றதிலும் சூதாட்டம் நடந்திருக்கலாம் என்று முன்னாள் கேப்டன் ரணதுங்கா அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருந்தார். இதையடுத்து ஒப்பந்தத்தில் உள்ள 40 கிரிக்கெட் வீரர்களை உடனடியாக அழைத்து இலங்கை கிரிக்கெட் வாரியம் விசாரணை நடத்தியது. இது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்று கூறிய வீரர்கள், கையெழுத்திட்ட கடிதத்தை கிரிக்கெட் வாரியத்திற்கு அனுப்பினர்.

இந்த நிலையில் இது தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) ஊழல்தடுப்பு பிரிவு இலங்கையில் விசாரணையை தொடங்கி இருக்கிறது. 3 பேர் கொண்ட கமிட்டி இலங்கைக்கு சென்று கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தியது. எந்த தொடர் மீது சந்தேக பார்வை இருக்கிறது என்பது பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

Next Story