இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: ஆஸ்திரேலிய வீரர் ஆஷ்டன் அகர் காயத்தால் விலகல்


இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: ஆஸ்திரேலிய வீரர் ஆஷ்டன் அகர் காயத்தால் விலகல்
x
தினத்தந்தி 25 Sep 2017 11:00 PM GMT (Updated: 25 Sep 2017 8:23 PM GMT)

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: எஞ்சிய 2 ஒருநாள் போட்டிகளில் ஆஷ்டன் அகர் விளையாடமாட்டார் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

மெல்போர்ன்,

இந்தியா–ஆஸ்திரேலியா அணிகள் இடையே இந்தூரில் நேற்று முன்தினம் நடந்த 3–வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்த போட்டியின் போது பீல்டிங் செய்கையில் ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஆஷ்டன் அகர் வலது கை சுண்டு விரலில் காயம் அடைந்தார். எக்ஸ்ரே எடுத்து பார்த்ததில் கைவிரலில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது. இதனால் அவர் சிகிச்சைக்காக உடனடியாக ஆஸ்திரேலியா திரும்புகிறார். எனவே எஞ்சிய 2 ஒருநாள் போட்டிகளில் ஆஷ்டன் அகர் விளையாடமாட்டார் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.


Next Story