இந்திய வீரரை புகழ்ந்து தள்ளிய ஷேன் வார்னே எரிச்சலில் பாகிஸ்தான் ரசிகர்கள்


இந்திய வீரரை புகழ்ந்து தள்ளிய ஷேன் வார்னே எரிச்சலில்  பாகிஸ்தான் ரசிகர்கள்
x
தினத்தந்தி 3 Oct 2017 7:01 AM GMT (Updated: 3 Oct 2017 7:01 AM GMT)

இந்திய வீரரை புகழ்ந்து தள்ளிய ஷேன் வார்னே எரிச்சலில் பாகிஸ்தான் ரசிகர்கள்


இந்திய அணியின் குல்தீப் யாதவ் தனது சிறப்பான பந்து வீச்சின் மூலம் வளர்ந்து வரும் வீரராக உள்ளார். அவரது பந்து வீச்சு எதிர்கொள்வதற்கு சற்று வித்தியாசமாக இருப்பதாக வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான சேஷன் வார்னே, நான் இந்தியாவில் இருந்த போது மிக இளம் வயது குல்தீப்யாதவை பார்த்தேன். அப்போதே அவரிடம் பேட்டிங்  செய்பவர்களை குழப்பும் திறமையும் பந்துவீச்சு சாதுர்யமும் இருந்தது. அவர் அப்போது அது போல் பந்து வீசுவதைப் பார்த்து நான் ரசித்துள்ளேன் அவர் இது போன்று தொடர்ந்து பொருமையாக அனைத்து விதமான போட்டிகளிலும் பந்து வீசி வருவாரானால் பாகிஸ்தானின் யாசிர் சாவை வெகு சீக்கிரத்தில் தள்ளிவிட்டு, இவர் கிரிக்கெட் உலகின் சிறந்த சுழற்பந்து வீச்சாளராக உறுமாறலாம் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இதனால் பாகிஸ்தான் ரசிகர்கள் அவருக்கு கோபமாக பதில் அளித்து வருகின்றனர்.



Next Story