சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற நெஹரா முடிவு


சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற நெஹரா முடிவு
x
தினத்தந்தி 11 Oct 2017 11:15 PM GMT (Updated: 11 Oct 2017 10:05 PM GMT)

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹரா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளார்.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹரா நவம்பர் 1-ந்தேதிக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளார். தனது முடிவை அணி நிர்வாகத்துக்கும், பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, கேப்டன் விராட் கோலி ஆகியோருக்கும் தெரிவித்து விட்டார். அது மட்டுமின்றி அடுத்த ஆண்டில் அவர் ஐ.பி.எல். போட்டியிலும் விளையாடப்போவதில்லை என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்.

38 வயதான நெஹரா, 1999-ம் ஆண்டு முகமது அசாருதீனின் கேப்டன்ஷிப்பில் அறிமுகம் ஆனார். 17 டெஸ்டில் விளையாடி 44 விக்கெட்டுகளும், 120 ஒரு நாள் போட்டிகளில் 157 விக்கெட்டுகளும், 26 இருபது ஓவர் போட்டிகளில் ஆடி 34 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்.

ஆஸ்திரேலிய 20 ஓவர் தொடருக்கான இந்திய அணியில் நெஹரா இடம் பெற்று இருந்த போதிலும் முதல் இரு ஆட்டங்களில் அவருக்கு களம் காண வாய்ப்பு கிடைக்கவில்லை. அடுத்து நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு வருகை தர உள்ளது. இந்தியா- நியூசிலாந்து இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் நவம்பர் 1-ந்தேதி நடக்கிறது. சொந்த ஊர் ரசிகர்களின் முன்னிலையில் விளையாடி விட்டு ஓய்வு பெற வேண்டும் என்பதே நெஹராவின் விருப்பமாகும்.


Next Story