குடும்ப பிரச்சினை: இந்திய கிரிக்கெட் அணி வீரர் யுவராஜ்சிங் மீது நீதிமன்றத்தில் வழக்கு


குடும்ப பிரச்சினை: இந்திய கிரிக்கெட் அணி வீரர் யுவராஜ்சிங் மீது நீதிமன்றத்தில் வழக்கு
x
தினத்தந்தி 19 Oct 2017 4:27 AM GMT (Updated: 19 Oct 2017 4:27 AM GMT)

குடும்ப பிரச்சினை தொடர்பாக இந்திய கிரிக்கெட் அணி வீரர் யுவராஜ்சிங் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

அமிர்தசரஸ்,

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங், அவரது அண்ணன் சொராவர் சிங் மற்றும் அவர்களது தாய் சப்னம் சிங் ஆகியோர் மீது குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

யுவராஜ் சிங்கின் அண்ணன் மனைவி அகன்க்ஸா, யுவராஜ்சிங் அண்ணன் சொராவர் சிங் மற்றும் தாயார் சப்னம் சிங் ஆகியோர் துன்புறுத்துவதாகவும் யுவராஜ்சிங், இதையெல்லாம் தட்டி கேட்காமல் வேடிக்கை பார்ப்பதாகவும் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில், குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் மூவர் மீதும் வழக்கு குர்கரம் நீதிமன்றத்தில் புகார் தொடுக்கப்பட்டுள்ளது. இந்த புகார் மனுவையடுத்து, யுவராஜ்சிங் உள்ளிட்ட மூவருக்கும் நோட்டீஸ் விடுத்துள்ள நீதிமன்றம், யுவராஜ் சிங் குடும்பத்தினர் மீதான வழக்கை வரும் அக்டோபர் 21-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்துள்ளது.

2014-ம் ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் அகன்க்ஸா. 2015ம் ஆண்டு யுவராஜ் சிங்கின் அண்ணனை மணந்தார். 
சில மாதங்களிலேயே இந்த திருமண உறவு முடிவுக்கு வந்தது. 2015 ஆம் ஆண்டே கணவர் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், தற்போது இப்படியொரு வழக்கு தொடுத்து இருப்பது உள்நோக்கம் கொண்டது என யுவராஜ்சிங் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். 

Next Story