இந்தியா-இலங்கை ஒரு நாள் போட்டி நேரத்தில் மாற்றம்


இந்தியா-இலங்கை ஒரு நாள் போட்டி நேரத்தில் மாற்றம்
x
தினத்தந்தி 19 Nov 2017 8:58 PM GMT (Updated: 19 Nov 2017 8:57 PM GMT)

டெஸ்ட் தொடர் முடிந்ததும் இந்திய அணி இலங்கைக்கு எதிராக 3 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுகிறது.

புதுடெல்லி,

டெஸ்ட் தொடர் முடிந்ததும் இந்திய அணி இலங்கைக்கு எதிராக 3 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் தர்மசாலா (டிச.10), மொகாலி (டிச.13) ஆகிய இடங்களில் நடக்க உள்ள முதல் இரு நாள் போட்டிகள் தொடங்கும் நேரத்தை இந்திய கிரிக்கெட் வாரியம் மாற்றியுள்ளது. இங்கு பிற்பகல் 1.30 மணிக்கு போட்டி தொடங்குவதாக இருந்தது. ஆனால் அங்கு அந்த சமயம் கடும் குளிருடன் பனிப்பொழிவும் அதிகமாக இருக்கும் என்று சம்பந்தப்பட்ட மாநில கிரிக்கெட் சங்கங்கள் கூறியதால் இவ்விரு இடங்களிலும் ஆட்டம் காலை 11.30 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 3-வது ஒரு நாள் போட்டி டிசம்பர் 17-ந்தேதி தேதி விசாகப்பட்டினத்தில் திட்டமிட்ட நேரத்தில் தொடங்கி (பிற்பகல் 1.30 மணி) நடைபெறும், அதில் மாற்றம் இல்லை என்றும் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருக்கிறது

Next Story