போட்டிகளில் அஸ்வின் பந்துகளில் அதிகமுறை வீழ்ந்தவர்களும் வீழ்த்த முடியாதவர்களும்


போட்டிகளில் அஸ்வின் பந்துகளில் அதிகமுறை வீழ்ந்தவர்களும் வீழ்த்த முடியாதவர்களும்
x
தினத்தந்தி 24 Nov 2017 11:55 AM GMT (Updated: 24 Nov 2017 11:55 AM GMT)

கிரிக்கெட் போட்டிகளில் அஸ்வின் பந்துகளில் அதிகமுறை வீழ்ந்தவர்களும் வீழ்த்த முடியாதவர்களும்

இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 2-வது போட்டி, மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில்  இன்று தொடங்கியுள்ளது.

இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாளான இன்று, இலங்கை பேட்ஸ்மேன் லஹிரு திரிமானே 9 ரன்களில் அஸ்வின் பந்துவீச்சில் போல்ட் ஆகி வெளியேறினார். இதையடுத்து அஸ்வின் வீழ்த்திய பேட்ஸ்மேன்களில் அதிகமுறை அவுட் ஆனவர் என்கிற ஒரு பெயர் திரிமானேவுக்குக் கிடைத்துள்ளது.

இதற்கு முன்பு அஸ்வின் பந்துவீச்சில் அதிகமுறை ஆட்டமிழந்தவர்களாக (11) திரிமானேவும் வார்னரும் இருந்தார்கள். இந்நிலையில் இன்றைய விக்கெட்டுடன் திரிமானேவை 21 போட்டிகளில் 12 முறை வீழ்த்தியுள்ளார் அஸ்வின். இவருடைய பந்துவீச்சை அதிகமுறை (31 போட்டிகள்) எதிர்கொண்ட இங்கிலாந்தின் குக், 9 முறை அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்துள்ளார்.

அஸ்வின் பந்துவீச்சில் அதிகமுறை வீழ்ந்த பேட்ஸ்மேன்கள்

லஹிரு திரிமானே (இலங்கை) - 12 தடவை
டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா) - 11 தடவை
குக் (இங்கிலாந்து) - 9 தடவை
டேரன் பிராவோ (மே.இ.) - 9 தடவை
ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து) - 9 தடவை

அஸ்வினால் வீழ்த்த முடியாத பேட்ஸ்மேன்கள்

மலிங்கா (இலங்கை) - 16 போட்டிகள்
பாக்னர் (ஆஸ்திரேலியா) - 15 போட்டிகள்
ரஸல் (மே.இ) - 13 போட்டிகள்
மெக்கே (ஆஸ்திரேலியா) - 12 போட்டிகள்
ஹேல்ஸ் (இங்கிலாந்து) - 11 போட்டிகள்
டேவிட் மில்லர் (தெ.ஆ.) - 11 போட்டிகள்
கிறிஸ் கெயில் (மே.இ.) - 10 போட்டிகள்

இந்தப் பட்டியலில் கிறிஸ் கெயில் இடம்பெற்றிருப்பது ஆச்சர்யமாக உள்ளது. ஏனெனில் ஐபிஎல் போட்டிகளில் கிறிஸ் கெயிலுக்குச் சவாலாக விளங்கிய அஸ்வின், சர்வதேசப் போட்டிகளில் அவருடைய விக்கெட்டை ஒருமுறை எடுத்ததில்லை!


Next Story