இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: 2-வது ஆட்டத்திலும் ஆஸ்திரேலியா தோல்வி


இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: 2-வது ஆட்டத்திலும் ஆஸ்திரேலியா தோல்வி
x
தினத்தந்தி 19 Jan 2018 9:00 PM GMT (Updated: 19 Jan 2018 8:20 PM GMT)

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் நேற்று நடந்தது.

பிரிஸ்பேன்,

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் நேற்று நடந்தது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 9 விக்கெட்டுக்கு 270 ரன்கள் சேர்த்தது. முதல் ஆட்டத்தை போன்றே இதிலும் சதம் அடித்த ஆரோன் பிஞ்ச் 106 ரன்களில் (114 பந்து, 9 பவுண்டரி, ஒரு சிக்சர்) கேட்ச் ஆனார். தனது 10-வது சதத்தை எட்டிய ஆரோன் பிஞ்ச், 10 சதங்களை (83 இன்னிங்ஸ்) அதிவேகமாக எடுத்த ஆஸ்திரேலிய வீரர் என்ற சிறப்பை பெற்றார். கேப்டன் ஸ்டீவன் சுமித் 18 ரன்னில் வீழ்ந்தார்.

பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி ஜானி பேர்ஸ்டோ (60 ரன்), அலெக்ஸ் ஹாலெஸ் (57 ரன்), ஜோ ரூட் (46 ரன்), ஜோஸ் பட்லர் (42 ரன்), கிறிஸ் வோக்ஸ் (39 ரன்) ஆகியோரின் கணிசமான பங்களிப்புடன் 44.2 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 274 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் ஆட்டத்திலும் இங்கிலாந்து அணியே வெற்றி கண்டிருந்தது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இங்கிலாந்து 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. ஆஸ்திரேலிய அணி, சொந்த மண்ணில் ஒரு நாள் தொடர் ஒன்றில் முதல் இரு ஆட்டங்களில் தோற்பது இது 3-வது நிகழ்வாகும். 3-வது ஒரு நாள் போட்டி சிட்னியில் நாளை நடக்கிறது.

Next Story