முத்தரப்பு கிரிக்கெட்டில் வங்காளதேச அணி சாதனை வெற்றி 163 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது


முத்தரப்பு கிரிக்கெட்டில் வங்காளதேச அணி சாதனை வெற்றி 163 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது
x
தினத்தந்தி 19 Jan 2018 9:00 PM GMT (Updated: 19 Jan 2018 8:24 PM GMT)

வங்காளதேசம், இலங்கை., ஜிம்பாப்வே ஆகிய அணிகள் பங்கேற்றுள்ள ஒரு நாள் கிரிக்கெட் தொடர் வங்காளதேசத்தில் நடந்து வருகிறது

டாக்கா,

வங்காளதேசம், இலங்கை., ஜிம்பாப்வே ஆகிய அணிகள் பங்கேற்றுள்ள ஒரு நாள் கிரிக்கெட் தொடர் வங்காளதேசத்தில் நடந்து வருகிறது இதில் மிர்புரில் நேற்று நடந்த 3-வது லீக் ஆட்டத்தில் வங்காளதேசம்- இலங்கை அணிகள் மோதின. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த வங்காளதேச அணி 7 விக்கெட்டுக்கு 320 ரன்கள் குவித்தது. தமிம் இக்பால் (84 ரன்), ஷகிப் அல்-ஹசன் (67 ரன்), முஷ்பிகுர் ரஹிம் (62 ரன்) அரைசதம் அடித்தனர். பின்னர் ஆடிய இலங்கை அணி 32.2 ஓவர்களில் 157 ரன்களில் முடங்கியது. இதன் மூலம் வங்காளதேச அணி 163 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக திசரா பெரேரா 29 ரன்கள் எடுத்தார். வங்காளதேசம் தரப்பில் ஷகிப் அல்-ஹசன் 3 விக்கெட்டுகளும், ருபெல் ஹூசைன், மோர்தசா தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

ஒரு நாள் கிரிக்கெட்டில், வங்காளதேசத்தின் மிகப்பெரிய வெற்றி இதுவாகும். இதற்கு முன்பு 2012-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீசை 160 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதே சாதனை வெற்றியாக இருந்தது. இந்த தொடரில் வங்காளதேசத்துக்கு கிடைத்த 2-வது வெற்றி இதுவாகும். இலங்கை அணிக்கு விழுந்த 2-வது அடியாகும். ஏற்கனவே ஜிம்பாப்வேயிடமும் மண்ணை கவ்வியிருந்தது. நாளைய ஆட்டத்தில் இலங்கை-ஜிம்பாப்வே அணிகள் சந்திக்கின்றன.

Next Story