கடைசி டெஸ்டிலும் இந்திய அணியை வீழ்த்துவதே இலக்கு தென்ஆப்பிரிக்க பவுலர் ரபடா பேட்டி


கடைசி டெஸ்டிலும் இந்திய அணியை வீழ்த்துவதே இலக்கு தென்ஆப்பிரிக்க பவுலர் ரபடா பேட்டி
x
தினத்தந்தி 19 Jan 2018 8:45 PM GMT (Updated: 19 Jan 2018 8:32 PM GMT)

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் காஜிசோ ரபடா நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

ஜோகன்னஸ்பர்க்,

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் காஜிசோ ரபடா நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

வேகப்பந்து வீச்சில் எந்த மாதிரி விளையாட வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். அதே சமயம் இந்திய வேகப்பந்து வீச்சு மீதும் மரியாதை வைத்துள்ளோம். ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற வேண்டும் என்பதே நோக்கம். அதனால் கடைசி டெஸ்டிலும் இந்திய அணியை தோற்கடித்து ‘ஒயிட்வாஷ்’ செய்ய விரும்புகிறோம். பேட்டிங்கில் இந்திய அணி விராட் கோலியைத்தான் அதிகமாக சார்ந்து இருக்கிறது. அது போன்று நாங்களும் சில வீரர்களைத் தான் நம்பி இருக்கிறோம். இந்திய அணியில் தரமான வீரர்கள் இல்லை என்று சொல்லமாட்டேன். ஆனால் அவர்களில் விராட் கோலியே அதிகமான ரன்கள் குவிக்கிறார் என்பதை மறுக்க முடியாது.

கோலிக்கு எதிராக நான் உற்சாகமாக பந்து வீசி வருகிறேன். இப்போது அவர் உலகின் சிறந்த வீரர் விருதுக்கு தேர்வாகி இருக்கிறார். சிறந்த வீரருக்கு எதிராக பதற்றமின்றி பொறுப்புணர்வோடு பந்து வீசுவது முக்கியமானது.

இவ்வாறு ரபடா கூறினார்.

இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நியூ வான்டரர்ஸ் ஸ்டேடியத்தில் வருகிற 24-ந்தேதி தொடங்குகிறது.

Next Story