ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: கால்இறுதியில் மோதுவது யார்-யார்?


ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: கால்இறுதியில் மோதுவது யார்-யார்?
x
தினத்தந்தி 20 Jan 2018 9:00 PM GMT (Updated: 20 Jan 2018 8:44 PM GMT)

12-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) நியூசிலாந்தில் நடந்து வருகிறது. நேற்று கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் நடந்தன.

குயின்ஸ்டவுன்

12-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) நியூசிலாந்தில் நடந்து வருகிறது. நேற்று கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் நடந்தன. ‘சி’ பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 282 ரன்கள் வித்தியாசத்தில் கனடாவை புரட்டியெடுத்து 6 புள்ளிகளுடன் கால்இறுதிக்கு முன்னேறியது. இந்த பிரிவில் இருந்து வங்காளதேசமும் (2 வெற்றி, ஒரு தோல்வியுடன் 4 புள்ளி) கால்இறுதியை எட்டியது. கனடா (2 புள்ளி), நமிபியா (3 ஆட்டத்திலும் தோல்வி) அணிகள் வெளியேறின. லீக் சுற்று நிறைவடைந்த நிலையில் மூன்று முறை சாம்பியனான இந்திய அணி வருகிற 26-ந்தேதி குயின்ஸ்டவுனில் நடக்கும் கால்இறுதியில் வங்காளதேசத்தை எதிர்கொள்கிறது. 2015-ம் ஆண்டு நடந்த சீனியர் உலக கோப்பை கிரிக்கெட்டிலும் இந்திய அணி கால்இறுதியில் வங்காளதேசத்துடன் தான் மோதியது குறிப்பிடத்தக்கது.

கால்இறுதியில் மோதும் அணிகள் விவரம் வருமாறு:-

ஜன.23 ஆஸ்திரேலியா - இங்கிலாந்து

ஜன.24 பாகிஸ்தான் - தென்ஆப்பிரிக்கா

ஜன.25 நியூசிலாந்து - ஆப்கானிஸ்தான்

ஜன.26 இந்தியா - வங்காளதேசம்

Next Story