தேசிய சீனியர் கைப்பந்து: அரைஇறுதியில் தமிழக அணி தோல்வி


தேசிய சீனியர் கைப்பந்து: அரைஇறுதியில் தமிழக அணி தோல்வி
x
தினத்தந்தி 29 Dec 2016 9:45 PM GMT (Updated: 29 Dec 2016 9:19 PM GMT)

தேசிய சீனியர் கைப்பந்து: அரைஇறுதியில் தமிழக அணி தோல்வி

சென்னை, 

65-வது தேசிய சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் பிரிவில் நேற்று நடந்த அரைஇறுதியில் தமிழக அணி, கேரளாவை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த மோதலில் தமிழக அணி 25-19, 19-25, 23-25, 17-25 என்ற செட் கணக்கில் கேரளாவிடம் தோற்றது. மற்றொரு அரைஇறுதியில் இந்தியன் ரெயில்வே 25-17, 25-23, 22-25, 25-23 என்ற செட் கணக்கில் பஞ்சாப்பை பதம் பார்த்தது. இன்று மாலை 6 மணிக்கு அரங்கேறும் இறுதி ஆட்டத்தில் கேரளா-இந்தியன் ரெயில்வே அணிகள் மோதுகின்றன. முன்னதாக 3-வது இடத்தை நிர்ணயிக்கும் வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் தமிழ்நாடு-பஞ்சாப் அணிகள் (பகல் 12 மணி) சந்திக்கின்றன.

பெண்கள் பிரிவில் நடந்த அரைஇறுதி ஆட்டங்களில் இந்தியன் ரெயில்வே 25-12, 25-12, 25-10 என்ற நேர் செட்டில் ஆந்திராவையும், கேரள அணி 25-18, 21-25, 25-21, 25-14 என்ற செட் கணக்கில் மராட்டியத்தையும் தோற்கடித்தது. இதன் மகுடத்துக்கான இறுதிப்போட்டியில் கேரளா-இந்தியன் ரெயில்வே அணிகள் இன்று மாலை 4 மணிக்கு பலப்பரீட்சையில் இறங்குகின்றன. 

Next Story